• Mar 28 2024

தீர்வு விடயத்தில் ரணிலுக்கு சுமந்திரன் விடுத்த இறுதி எச்சரிக்கை!

Sharmi / Jan 5th 2023, 3:43 pm
image

Advertisement

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றும் முயற்சிகளை மேற்கொண்டால் தமிழ் மக்களை அணி திரட்டி அரசுக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்தின் இன்று சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மாலை நடைபெறவுள்ள முன்னாயத்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் ஆனால் தாம் சந்தேக கண்ணுடனேயே இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு பேச்சுவார்த்தையிலே ஈடுபட ஆரம்பித்திருக்கிறோம். ஜனாதிபதி நவம்பர் மாதம் வரவு செலவு திட்ட குழு நிலை விவகாரத்தில் முதலாம் நாள் நான் உரையாற்றிக்கொண்டிருந்த பொழுது இந்த விடயத்தை பற்றி எழுந்து பேசி ஏனைய கட்சி தலைவர்களோடு கலந்தாலோசித்து வரவு செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்தவுடனேயே நாங்கள் சந்திக்கலாம் என்று கூறி சர்வகட்சி மாநாடு ஒன்றை டிசம்பர் 13 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.

அதிலே பலரும் இதனை தீர்க்க வேண்டும் ,தமிழ் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தர வேண்டும்,உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என்ற முற்போக்கான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள்.அதிலே குறிப்பாக நீதியமைச்சர் பிரதான பங்கு வகிக்கிறார்.

இன்று தொடர்ச்சியாக பல காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அதிலே முக்கியமான ஒன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி ,எங்களுடைய நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுவது மிகவும் பிரதானமான விடயம் .ஆகவே நல்லிணக்கத்தை நாங்கள் ஒரு அரசியல் தீர்வு மூலம் அடையலாமா?இல்லையா? என்பதை பெப் 4 ஆம் திகதி தெரிந்து கொள்ள வேண்டும்.அதை நான் நாட்டிற்கும்,உலகத்திற்கும் அறிவிக்கப் போகின்றேன் என ஜனாதிபதி சொல்லுவதிலே இந்த விடயங்கள் முதலில் தீர்க்கப்பட வேண்டும்.

ஆனால் அதேவேளையில் இதில் இறுதி தீர்வு என்ன என்பதனை அனைவ்ரும் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.இன்று மாலை ஒரு ஆயத்த கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.அதற்கு பிறகு நாங்கள் 10 ஆம் திகதியிலிருந்து இந்த பேச்சுவார்த்தையினை நடத்த இருக்கின்றோம்.

இந்த வேளையில் எங்களுடைய கட்சியின் சார்பாக சில முக்கியமான விடயங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன் .நாங்கள் தொடர்ச்சியாக ஒரு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை கோரி நிற்கின்றோம்.அர்த்தமில்லாத அதிகாரப் பகிர்வு எவருக்கும் தேவை இல்லை.அது அர்த்தம் இல்லாததாக இருந்தால்அது அதிகாரப் பகிர்வே கிடையாது.ஆகவே அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒரு சமஸ்டி கட்டமைப்பில் மட்டும்தான் முடியும் என்பதனை திட்டவட்டமாக நாங்கள் கூறுகின்றோம்.

அதனை சொல்லிக் கொண்டிருக்கின்ற போது தான் அதனை தீர்க்க முடியும்,என்று ஜனாதிபதி நம்பிக்கையோடு வெளிப்படுத்தி இருக்கின்றார்.அதை சொல்லுகிறார்.அதற்கான காலக்கெடுவை அவரே தீர்மானித்து இருக்கிறார்,வருகின்ற 4 ஆம் திகதிக்கு முன்னதாக இதனை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

நாங்கள் அந்தக் காலக் கெடுவிற்கு இணங்கி இருக்கின்றோம். ஏனெனில் இது சம்பந்தமாக 35 வருடங்களாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.பல இணக்கப்பாடுகள் எய்யப்பட்டுள்ளன.அதை நடைமுறைப்படுத்துவது தான் தேவையே தவிர புதிதாக நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியதில்லை.

ஆகையால் திரும்பவும் இந்த ஆண்டில் நாங்கள்,இன்றைக்கும் அந்தப் பேச்சுவார்த்தைக்கு சென்று ஆயத்தங்களை செய்கின்ற வேளையில் எங்களுடைய நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாக நாட்டுக்கும் உலகத்துக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் இந்தக் காலக் கெடுவிற்குள் இது முடிய வேண்டும்.  அது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்.முக்கியமாக தமிழ் அரசியல் பிரச்சினைகள் தீருகின்றது என்று சொல்லுகின்ற போது தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாசைகள் அதனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இல்லையென்றால் இது காலத்தை இழுத்தடிப்பதற்கான செயற்பாடாக இருக்குமாக இருந்தால்,எங்களுக்கு பலத்த சந்தேகங்கள் இருக்கின்றன .சந்தேகத்துடன் தான் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகின்றோம் என்பதை திரும்பத் திரும்ப நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் பல தடவைகள் இவ்வாறான பல முயற்சிகள் எடுக்கப்பட்டு எதுவுமே முடிவடையாத நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வர  மறுத்தோம் என்று ஒரு பழிச்சொல்லுக்கு வரக்கூடாது என்பதற்காக நாங்கள் இதயபூர்வமாக இதய சுத்தியோடு நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம்.என்ற நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி இருக்கின்றோம்.

ஆனால் அதைச் செய்ய தவறுமாக இருந்தால் அதன் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் இந்தக் காலக் கெடுவிற்குள் நடக்காவிட்டால் நாங்கள் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்துவோம் .இந்த காலக்கெடுவிற்குள் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டே எங்களை ஏமாற்றுகின்ற  ஒரு நாடகத்தினை அரசாங்கம் அரங்கேற்றுகிறது என்று பலர் எங்களுக்கு எச்சரிக்கிறார்கள்.அப்படி ஆகவும் இருக்கக் கூடும்.

இந்த சிறிய கால கெடுவிற்குள் அது தெரிய வரும் அப்படியான ஒரு செயற்பாடாக இருக்கும் ஆனால் நாட்டினுடையதும் சர்வதேசத்தினுடையதும் கண்களில் மண்ணைத் தூவுகின்ற மாதிரியான ஒரு செயற்பாடாக அரசாங்கம் செய்யும் ஆக இருந்தால் அதை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தப்படும் .அதனை உலகத்திற்கு நாங்கள் பறைசாற்றுவோம் அதனை உலகத்திற்கு நாங்கள் பறைசாற்றுவோம் நாட்டிலேயே எங்களுடைய மக்களை அணி திரட்டி உங்களுடைய நியாயமான அரசியல் சுதந்திரத்திற்காக நாங்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டத்தை முன்னெடுப்போம்.

இந்த ஜனாதிபதி கொடுத்த கால கெடுவிற்குள் ஒரு மாதத்திற்கு முன்னதாக  நாங்கள் விடுக்கின்ற எச்சரிக்கையாக  அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

தீர்வு விடயத்தில் ரணிலுக்கு சுமந்திரன் விடுத்த இறுதி எச்சரிக்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றும் முயற்சிகளை மேற்கொண்டால் தமிழ் மக்களை அணி திரட்டி அரசுக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்தின் இன்று சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்று மாலை நடைபெறவுள்ள முன்னாயத்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் ஆனால் தாம் சந்தேக கண்ணுடனேயே இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரு பேச்சுவார்த்தையிலே ஈடுபட ஆரம்பித்திருக்கிறோம். ஜனாதிபதி நவம்பர் மாதம் வரவு செலவு திட்ட குழு நிலை விவகாரத்தில் முதலாம் நாள் நான் உரையாற்றிக்கொண்டிருந்த பொழுது இந்த விடயத்தை பற்றி எழுந்து பேசி ஏனைய கட்சி தலைவர்களோடு கலந்தாலோசித்து வரவு செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்தவுடனேயே நாங்கள் சந்திக்கலாம் என்று கூறி சர்வகட்சி மாநாடு ஒன்றை டிசம்பர் 13 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.அதிலே பலரும் இதனை தீர்க்க வேண்டும் ,தமிழ் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தர வேண்டும்,உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என்ற முற்போக்கான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள்.அதிலே குறிப்பாக நீதியமைச்சர் பிரதான பங்கு வகிக்கிறார்.இன்று தொடர்ச்சியாக பல காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அதிலே முக்கியமான ஒன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி ,எங்களுடைய நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுவது மிகவும் பிரதானமான விடயம் .ஆகவே நல்லிணக்கத்தை நாங்கள் ஒரு அரசியல் தீர்வு மூலம் அடையலாமாஇல்லையா என்பதை பெப் 4 ஆம் திகதி தெரிந்து கொள்ள வேண்டும்.அதை நான் நாட்டிற்கும்,உலகத்திற்கும் அறிவிக்கப் போகின்றேன் என ஜனாதிபதி சொல்லுவதிலே இந்த விடயங்கள் முதலில் தீர்க்கப்பட வேண்டும்.ஆனால் அதேவேளையில் இதில் இறுதி தீர்வு என்ன என்பதனை அனைவ்ரும் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.இன்று மாலை ஒரு ஆயத்த கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.அதற்கு பிறகு நாங்கள் 10 ஆம் திகதியிலிருந்து இந்த பேச்சுவார்த்தையினை நடத்த இருக்கின்றோம்.இந்த வேளையில் எங்களுடைய கட்சியின் சார்பாக சில முக்கியமான விடயங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன் .நாங்கள் தொடர்ச்சியாக ஒரு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை கோரி நிற்கின்றோம்.அர்த்தமில்லாத அதிகாரப் பகிர்வு எவருக்கும் தேவை இல்லை.அது அர்த்தம் இல்லாததாக இருந்தால்அது அதிகாரப் பகிர்வே கிடையாது.ஆகவே அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒரு சமஸ்டி கட்டமைப்பில் மட்டும்தான் முடியும் என்பதனை திட்டவட்டமாக நாங்கள் கூறுகின்றோம்.அதனை சொல்லிக் கொண்டிருக்கின்ற போது தான் அதனை தீர்க்க முடியும்,என்று ஜனாதிபதி நம்பிக்கையோடு வெளிப்படுத்தி இருக்கின்றார்.அதை சொல்லுகிறார்.அதற்கான காலக்கெடுவை அவரே தீர்மானித்து இருக்கிறார்,வருகின்ற 4 ஆம் திகதிக்கு முன்னதாக இதனை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.நாங்கள் அந்தக் காலக் கெடுவிற்கு இணங்கி இருக்கின்றோம். ஏனெனில் இது சம்பந்தமாக 35 வருடங்களாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.பல இணக்கப்பாடுகள் எய்யப்பட்டுள்ளன.அதை நடைமுறைப்படுத்துவது தான் தேவையே தவிர புதிதாக நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியதில்லை.ஆகையால் திரும்பவும் இந்த ஆண்டில் நாங்கள்,இன்றைக்கும் அந்தப் பேச்சுவார்த்தைக்கு சென்று ஆயத்தங்களை செய்கின்ற வேளையில் எங்களுடைய நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாக நாட்டுக்கும் உலகத்துக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் இந்தக் காலக் கெடுவிற்குள் இது முடிய வேண்டும்.  அது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்.முக்கியமாக தமிழ் அரசியல் பிரச்சினைகள் தீருகின்றது என்று சொல்லுகின்ற போது தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாசைகள் அதனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.இல்லையென்றால் இது காலத்தை இழுத்தடிப்பதற்கான செயற்பாடாக இருக்குமாக இருந்தால்,எங்களுக்கு பலத்த சந்தேகங்கள் இருக்கின்றன .சந்தேகத்துடன் தான் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகின்றோம் என்பதை திரும்பத் திரும்ப நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் பல தடவைகள் இவ்வாறான பல முயற்சிகள் எடுக்கப்பட்டு எதுவுமே முடிவடையாத நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வர  மறுத்தோம் என்று ஒரு பழிச்சொல்லுக்கு வரக்கூடாது என்பதற்காக நாங்கள் இதயபூர்வமாக இதய சுத்தியோடு நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம்.என்ற நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி இருக்கின்றோம்.ஆனால் அதைச் செய்ய தவறுமாக இருந்தால் அதன் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் இந்தக் காலக் கெடுவிற்குள் நடக்காவிட்டால் நாங்கள் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்துவோம் .இந்த காலக்கெடுவிற்குள் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டே எங்களை ஏமாற்றுகின்ற  ஒரு நாடகத்தினை அரசாங்கம் அரங்கேற்றுகிறது என்று பலர் எங்களுக்கு எச்சரிக்கிறார்கள்.அப்படி ஆகவும் இருக்கக் கூடும்.இந்த சிறிய கால கெடுவிற்குள் அது தெரிய வரும் அப்படியான ஒரு செயற்பாடாக இருக்கும் ஆனால் நாட்டினுடையதும் சர்வதேசத்தினுடையதும் கண்களில் மண்ணைத் தூவுகின்ற மாதிரியான ஒரு செயற்பாடாக அரசாங்கம் செய்யும் ஆக இருந்தால் அதை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தப்படும் .அதனை உலகத்திற்கு நாங்கள் பறைசாற்றுவோம் அதனை உலகத்திற்கு நாங்கள் பறைசாற்றுவோம் நாட்டிலேயே எங்களுடைய மக்களை அணி திரட்டி உங்களுடைய நியாயமான அரசியல் சுதந்திரத்திற்காக நாங்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டத்தை முன்னெடுப்போம்.இந்த ஜனாதிபதி கொடுத்த கால கெடுவிற்குள் ஒரு மாதத்திற்கு முன்னதாக  நாங்கள் விடுக்கின்ற எச்சரிக்கையாக  அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement