• Nov 24 2024

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு - நவ சமாயக் கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பு

Anaath / Sep 17th 2024, 4:49 pm
image

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தென்னிலங்கை வேட்பாளர்கள் கண்டு கொள்ளவில்லை எனவும் தாம் தமிழ் பொது வேட்பாளராய் ஆதரிப்பதாகவும்  நவ சமசமாஜக் கட்சி உறுப்பினர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் (16)  யாழில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையிலே இந்த தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தல் அதிலும் வடகிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்க்கமான ஒரு தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. தென்னிலங்கையில்  வேட்பாளர்களும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையில் ஒரு மந்த போக்கினையே கடைப்பிடிக்கின்றனர். அதாவது அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூறுவதில்லை. இவர்களுக்கான சுய  நிர்ணய உரிமையோ அல்லது சுயாட்சியோ பெற்றுக்கொடுக்கப்படும் என்று கூறுவதற்கு தயங்குகிறார்கள். 

தமிழ் மக்களும்  இறுதியாக ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தியிருக்கிறார்கள். நாங்கள் அதனை வரவேற்கிறோம். இருந்தாலும் கூட அந்த வரவேற்பு தமிழ் மக்களினுடைய ஒட்டு மொத்த தமிழ் தலைமைத்துவமும் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் அது மிகவும் வெற்றி பெறக்கூடிய கூடிய தன்மையை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். 

நாங்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் எவ்வாறு எட்டப்பட்டதோ அதே போன்று ஒரு மாநாட்டை அழைத்து அந்த மாநாட்டின்  மூலம்   ஒரு தலைவரை நிறுத்தி இந்த தேர்தலை முன்னிறுத்தியிருந்தால் அது அவர்களுக்கு பெரிய ஒரு சவாலாக இருக்கும் என நாங்கள் நினைக்கின்றோம்.

இவ்வாறான விடயங்களில் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் தலைமைத்துவமும் ஒன்றிணைந்து செயல் படவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.






தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு - நவ சமாயக் கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தென்னிலங்கை வேட்பாளர்கள் கண்டு கொள்ளவில்லை எனவும் தாம் தமிழ் பொது வேட்பாளராய் ஆதரிப்பதாகவும்  நவ சமசமாஜக் கட்சி உறுப்பினர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (16)  யாழில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையிலே இந்த தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தல் அதிலும் வடகிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்க்கமான ஒரு தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. தென்னிலங்கையில்  வேட்பாளர்களும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையில் ஒரு மந்த போக்கினையே கடைப்பிடிக்கின்றனர். அதாவது அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூறுவதில்லை. இவர்களுக்கான சுய  நிர்ணய உரிமையோ அல்லது சுயாட்சியோ பெற்றுக்கொடுக்கப்படும் என்று கூறுவதற்கு தயங்குகிறார்கள். தமிழ் மக்களும்  இறுதியாக ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தியிருக்கிறார்கள். நாங்கள் அதனை வரவேற்கிறோம். இருந்தாலும் கூட அந்த வரவேற்பு தமிழ் மக்களினுடைய ஒட்டு மொத்த தமிழ் தலைமைத்துவமும் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் அது மிகவும் வெற்றி பெறக்கூடிய கூடிய தன்மையை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். நாங்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் எவ்வாறு எட்டப்பட்டதோ அதே போன்று ஒரு மாநாட்டை அழைத்து அந்த மாநாட்டின்  மூலம்   ஒரு தலைவரை நிறுத்தி இந்த தேர்தலை முன்னிறுத்தியிருந்தால் அது அவர்களுக்கு பெரிய ஒரு சவாலாக இருக்கும் என நாங்கள் நினைக்கின்றோம்.இவ்வாறான விடயங்களில் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் தலைமைத்துவமும் ஒன்றிணைந்து செயல் படவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement