• Sep 22 2024

கூட்டமைப்பினருக்கு ஆதரவு வழங்குவது தற்கொலைக்கு சமனானது - கஜேந்திரன் எம்.பி ஆவேசம்!

Sharmi / Jan 25th 2023, 2:44 pm
image

Advertisement

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி, புளொட்,டெலோ,  ஈ.பி ஆர் எல் எப் போன்ற தரப்பினர் மக்கள் ஆணையினை பெற்றால் பாராளுமன்றத்தில் ஒற்றையாட்சியினை அங்கீகரிக்கும் துர்ப்பாக்கிய  நிலைமை ஏற்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமூகம் ஊடகத்திற்கு பிரேத்தியேகமாக கருத்து தெரிவிக்கும்  போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

தமிழ் தேசத்தை பொறுத்த வரை தமிழ் தேச மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த தேர்தலில்  கூட்டமைபிலிருந்த தமிழரசு கட்சி, புளோட் ,  டெலோ, ஈ..பி ஆர் எல் எப் போன்ற தரப்புகள் போட்டியிடுகின்ற  போது மீண்டும் மக்கள் ஆணையை பெறுவர்களாக இருந்தால், தமிழர்கள் சமஷ்டியை கைவிட்டு விட்டார்கள்.  ஒற்றையாட்சிக்குள் 13 ஆம் திருத்த சட்டத்துக்கு தயாராகி விட்டார்கள் என்ற போலி தோற்றத்தை வெளியே காட்டி அச்சமில்லாது பாராளுமன்றத்தில் ஒற்றையாட்சியினை அங்கீகரிக்கின்ற நிலை ஏற்படும்.

அவ்வாறான நிலைமையானது  தமிழ் மக்கள் தாங்களே தற்கொலை செய்யும்  செயற்பாட்டிற்கு ஒப்பானது. ஆகவே, அவ்வாறான ஒரு நிலைமைக்கு இடமளிக்க கூடாது.  இவர்கள் இந்த அரசியல் அரங்கிலிருந்து முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு மக்கள் தமது முழு ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் நான் கேட்டு கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பினருக்கு ஆதரவு வழங்குவது தற்கொலைக்கு சமனானது - கஜேந்திரன் எம்.பி ஆவேசம் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி, புளொட்,டெலோ,  ஈ.பி ஆர் எல் எப் போன்ற தரப்பினர் மக்கள் ஆணையினை பெற்றால் பாராளுமன்றத்தில் ஒற்றையாட்சியினை அங்கீகரிக்கும் துர்ப்பாக்கிய  நிலைமை ஏற்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.சமூகம் ஊடகத்திற்கு பிரேத்தியேகமாக கருத்து தெரிவிக்கும்  போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,  தமிழ் தேசத்தை பொறுத்த வரை தமிழ் தேச மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த தேர்தலில்  கூட்டமைபிலிருந்த தமிழரசு கட்சி, புளோட் ,  டெலோ, ஈ.பி ஆர் எல் எப் போன்ற தரப்புகள் போட்டியிடுகின்ற  போது மீண்டும் மக்கள் ஆணையை பெறுவர்களாக இருந்தால், தமிழர்கள் சமஷ்டியை கைவிட்டு விட்டார்கள்.  ஒற்றையாட்சிக்குள் 13 ஆம் திருத்த சட்டத்துக்கு தயாராகி விட்டார்கள் என்ற போலி தோற்றத்தை வெளியே காட்டி அச்சமில்லாது பாராளுமன்றத்தில் ஒற்றையாட்சியினை அங்கீகரிக்கின்ற நிலை ஏற்படும்.அவ்வாறான நிலைமையானது  தமிழ் மக்கள் தாங்களே தற்கொலை செய்யும்  செயற்பாட்டிற்கு ஒப்பானது. ஆகவே, அவ்வாறான ஒரு நிலைமைக்கு இடமளிக்க கூடாது.  இவர்கள் இந்த அரசியல் அரங்கிலிருந்து முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு மக்கள் தமது முழு ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் நான் கேட்டு கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement