• Sep 08 2024

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக சுரேஸ்..! வெளியான புதிய தகவல்.! samugammedia

Chithra / Jun 18th 2023, 4:23 pm
image

Advertisement

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாகக்குழு தெரிவு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. 

கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரை இடம்பெற்றிருந்தது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக - தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை சேர்ந்த ஆர்.ராகவன்,  


ஊடகப் பேச்சாளராக - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், 

தேசிய அமைப்பாளராக - தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரமும் 

பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இணைத்தலைவர்களாக செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், 

சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா, மற்றும் வேந்தன் ஆகியோரும் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கூட்டத்தில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக சுரேஸ். வெளியான புதிய தகவல். samugammedia ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாகக்குழு தெரிவு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரை இடம்பெற்றிருந்தது.ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக - தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை சேர்ந்த ஆர்.ராகவன்,  ஊடகப் பேச்சாளராக - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தேசிய அமைப்பாளராக - தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரமும் பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.இணைத்தலைவர்களாக செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா, மற்றும் வேந்தன் ஆகியோரும் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement