• Jan 13 2025

துப்பாக்கிகளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்

Chithra / Jan 5th 2025, 3:38 pm
image

  

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 8mm கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் சீனிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 55 தோட்டாக்கள், 2 கைக்குண்டுகள் மற்றும் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 66 தோட்டாக்கள் என்பனவும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை கிரிபாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஹல மரதன்கடவல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளை வைத்திருந்த இருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 மற்றும் 52 வயதுடைய பஹல கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கொபெய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஹவெவ சந்தி பிரதேசத்தில் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 28 வயதுடைய கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிகளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்   உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 8mm கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் சீனிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 55 தோட்டாக்கள், 2 கைக்குண்டுகள் மற்றும் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 66 தோட்டாக்கள் என்பனவும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.இதேவேளை கிரிபாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஹல மரதன்கடவல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளை வைத்திருந்த இருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.34 மற்றும் 52 வயதுடைய பஹல கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, கொபெய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஹவெவ சந்தி பிரதேசத்தில் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில் 28 வயதுடைய கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement