• May 08 2024

கத்தாரில் தமிழ் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

Sharmi / Dec 26th 2022, 10:30 am
image

Advertisement

இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கத்தார்  தமிழர் சங்கம் ஏற்பாடு செய்த,  நடந்து முடிந்த உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார விழாவை பாராட்டும் வகையில் அதில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களையும்  கௌரவிக்கும் நிகழ்வு இன்று கத்தார் றோயல் பிளாசாவில் நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.12.2022) உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார நிகழ்வு லூசைலில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் பறையிசை, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை ஆகிய கத்தார் வாழ் தமிழ் கலைஞர்களால் வெளிநாட்டு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் தனது திறமைகளை வெளிகாட்டிய அனைத்து கலைஞர்களையும் அவர்களை பயிற்றுவித்த ஆசான்களையும் ஊக்குவிக்கும் முகமாக விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் கத்தார் தமிழர் சங்கத்தினால் வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் கத்தார் தமிழ் சங்கத்தின் தலைவர் மணி பாரதி, உப தலைவர் ரமேஷ், மற்றும் பொதுச் செயலர் முனியப்பன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய ஸ்கை தமிழ் வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் பணிப்பாளர் ஜே.எம் பாஸித், உறுப்பினர் ஹுபைப் முஸம்மில் மற்றும் பஸ்மீர் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கத்தாரில் தமிழ் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கத்தார்  தமிழர் சங்கம் ஏற்பாடு செய்த,  நடந்து முடிந்த உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார விழாவை பாராட்டும் வகையில் அதில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களையும்  கௌரவிக்கும் நிகழ்வு இன்று கத்தார் றோயல் பிளாசாவில் நடைபெற்றது.கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.12.2022) உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார நிகழ்வு லூசைலில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பறையிசை, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை ஆகிய கத்தார் வாழ் தமிழ் கலைஞர்களால் வெளிநாட்டு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வில் தனது திறமைகளை வெளிகாட்டிய அனைத்து கலைஞர்களையும் அவர்களை பயிற்றுவித்த ஆசான்களையும் ஊக்குவிக்கும் முகமாக விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் கத்தார் தமிழர் சங்கத்தினால் வழங்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்வில் கத்தார் தமிழ் சங்கத்தின் தலைவர் மணி பாரதி, உப தலைவர் ரமேஷ், மற்றும் பொதுச் செயலர் முனியப்பன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய ஸ்கை தமிழ் வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் பணிப்பாளர் ஜே.எம் பாஸித், உறுப்பினர் ஹுபைப் முஸம்மில் மற்றும் பஸ்மீர் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement