• Nov 23 2024

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக மீனவர்கள்..!

Sharmi / Sep 26th 2024, 3:15 pm
image

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அனுர குமார திசநாயக்கவுக்கு தமிழக மீனவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தேசிய பாரம்பரிய  மீனவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த ராபர்ட் என்ற மீனவர் இலங்கை கடற்படையால்  சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு  இலங்கை சிறையில்  அடைக்கப்பட்டார்.

அவரை மீட்க அவரது குடும்பத்தினர் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூடடமைப்பு உதவியுடன் பல்வேறு வகையில் முயற்சி செய்தனர்.

இந்நிலையில் இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை இலங்கை அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக அறிவித்தது. 

 இதையடுத்து கூட்டமைப்பு சார்பில் பல்வேறு வகையில் முயற்சி செய்து பொதுமன்னிப்பு பெயர் பட்டியல் அட்டவணையில் மீனவர் இராபர்ட் பெயரையும் சேர்க்கபட்டது. இதனால் ஓராண்டு தண்டனை பெற்ற மீனவர் ராபர்ட் அவர்களும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது இலங்கை அரசின் பொது மன்னிப்பில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு தண்டனை கைதி இவர் மட்டுமே. விடுதலையான மீனவர் ராபர்ட் அவர்கள் விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு  மீன்வளத்துறை மூலம் இன்று குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 

மீனவர் ராபர்ட் விடுதலைக்கு உதவிய தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு மற்றும் இலங்கை அரசிற்கும் மீனவர்களின் குடும்பம் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அனுர குமார திசநாயக்கவுக்கு  தமிழக மீனவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 மேலும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும், பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி இலங்கை புதிய ஜனாதிபதியிடம் தமிழக மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி, ஒருங்கிணைப்பாளர் நிமிரோ மற்றும் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர் குரூஸ்  மீனவ சங்க தலைவர்கள் பலர் உடன் இருந்தனர்.


 

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக மீனவர்கள். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அனுர குமார திசநாயக்கவுக்கு தமிழக மீனவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தேசிய பாரம்பரிய  மீனவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த ராபர்ட் என்ற மீனவர் இலங்கை கடற்படையால்  சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு  இலங்கை சிறையில்  அடைக்கப்பட்டார். அவரை மீட்க அவரது குடும்பத்தினர் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூடடமைப்பு உதவியுடன் பல்வேறு வகையில் முயற்சி செய்தனர்.இந்நிலையில் இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை இலங்கை அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக அறிவித்தது.  இதையடுத்து கூட்டமைப்பு சார்பில் பல்வேறு வகையில் முயற்சி செய்து பொதுமன்னிப்பு பெயர் பட்டியல் அட்டவணையில் மீனவர் இராபர்ட் பெயரையும் சேர்க்கபட்டது. இதனால் ஓராண்டு தண்டனை பெற்ற மீனவர் ராபர்ட் அவர்களும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.தற்போது இலங்கை அரசின் பொது மன்னிப்பில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு தண்டனை கைதி இவர் மட்டுமே. விடுதலையான மீனவர் ராபர்ட் அவர்கள் விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு  மீன்வளத்துறை மூலம் இன்று குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டார். மீனவர் ராபர்ட் விடுதலைக்கு உதவிய தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு மற்றும் இலங்கை அரசிற்கும் மீனவர்களின் குடும்பம் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்இந்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அனுர குமார திசநாயக்கவுக்கு  தமிழக மீனவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும், பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி இலங்கை புதிய ஜனாதிபதியிடம் தமிழக மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதில் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி, ஒருங்கிணைப்பாளர் நிமிரோ மற்றும் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர் குரூஸ்  மீனவ சங்க தலைவர்கள் பலர் உடன் இருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement