• Dec 20 2024

ஓமான் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - மீட்டுத் தருமாறு குடும்பத்தினர் வேண்டுகோள்

Chithra / Dec 20th 2024, 8:40 am
image

 

2022ம் ஆண்டு பணி பெண்ணாக வெளிநாடு சென்ற மட்டக்களப்பு - முனைக்காடு பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடமாக எதுவித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை உரிய முறையில் மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுகின்றனர். 

சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

குடும்பத்தின் கஷ்ட நிலைமையினை கருத்தில் கொண்டு பணிப்பெண்ணாக ஓமான் நாட்டிற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு முகவர் ஒருவர் மூலம் சென்றதாகவும், 

அங்கு சென்று இரண்டு மாதங்கள் வேலை எதுவும் இல்லாது இருந்ததாகவும் பின்னர் பணிப்பெண்ணாக ஒரு வீட்டில் நியமிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசி அழைப்பின் மூலம் தொடர்பு கொள்வதாகவும், பின்னர் அந்த தொலைபேசி தொடர்பானது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இடம்பெற்றதாகவும் சகோதரிகள் தெரிவித்ததுடன், 2023ம் ஆண்டு மாதாந்தம் ஒரு லட்சம் தொடக்கம் 75 ஆயிரம் ரூபாய் வரை தொடர்ச்சியாக கடந்த வருடம் மார்கழி மாதம் வரை பணம் அனுப்பியதாகவும் குறித்த பெண்ணின் சகோதரிகள் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த பெண்ணின் தொலைபேசியினை அவர் பணிபுரியும் வீட்டார் அபகரித்து வைத்துள்ளதாகவும் 5 நாட்களுக்கு ஒரு முறை மாத்திரம் குடும்பத்தாரிடம் கதைப்பதற்கு வழங்குவதாகவும் குறித்த பெண்ணின் சகோதரர்கள் தெரிவித்ததுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 25ஆம் தேதி தொடர்பு கொண்டதன் பின்னர் ஒரு வருடங்கள் தற்பொழுது கடந்தும் என்ன நடந்தது என்று தெரியாமலும் தொடர்பு கொள்வதற்கான வழிகளும் இல்லாமல் அவதியுறுவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதுடன் தற்போது அந்த குழந்தைகள் அவரது தாய் மற்றும் சகோதரிகளின் அரவணைப்பில் வாழ்வதாகவும் தெரிவித்தனர். 


குறித்த பெண்ணை நாட்டிற்கு மீள கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் தங்களால் எது வித நடவடிக்கைகளையும் சிறப்பாக கொண்டு செல்ல முடியவில்லை எனவும் கவலை தெரிவித்தனர். 

குறித்த பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவரிடம் அவரது விடயங்கள் தொடர்பாக கேட்பதற்கு தொடர்புகளை மேற்கொண்ட போதும் அவர்களுக்கு எதுவும் தெரியாது எனவும் சற்று வேலையாக இருக்கின்றோம் இப்பொழுது கதைக்க முடியாது எனவும் அலட்சியமாக பேசுவதாகவும் தெரிவித்தனர். 

பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் செல்லாது போலி ஆவங்கள் ஆவணங்களைக் கொண்டே இந்த பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் குறித்த பெண்ணை மீட்டெடுப்பதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தில் சென்று விசாரித்த போதும் இவர் உரிய முறையில் செல்லவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்ணின் கடவுச்சீட்டின் இலக்கத்தை வழங்கினால் மாத்திரமே தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்ததாக சகோதரிகள் தெரிவித்தனர். 

குறித்த பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லாது வீட்டில் இருந்ததாகவும் இதனால் பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி உணவு போன்ற விடயங்களில் சிரமத்தை எதிர்நோக்கியதன் விளைவாகவே குறித்த பெண் வெளிநாடு செல்ல முயற்சித்ததாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. 

குறித்த பெண்ணை மீட்டு தருமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஓமான் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - மீட்டுத் தருமாறு குடும்பத்தினர் வேண்டுகோள்  2022ம் ஆண்டு பணி பெண்ணாக வெளிநாடு சென்ற மட்டக்களப்பு - முனைக்காடு பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடமாக எதுவித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை உரிய முறையில் மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுகின்றனர். சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,குடும்பத்தின் கஷ்ட நிலைமையினை கருத்தில் கொண்டு பணிப்பெண்ணாக ஓமான் நாட்டிற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு முகவர் ஒருவர் மூலம் சென்றதாகவும், அங்கு சென்று இரண்டு மாதங்கள் வேலை எதுவும் இல்லாது இருந்ததாகவும் பின்னர் பணிப்பெண்ணாக ஒரு வீட்டில் நியமிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசி அழைப்பின் மூலம் தொடர்பு கொள்வதாகவும், பின்னர் அந்த தொலைபேசி தொடர்பானது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இடம்பெற்றதாகவும் சகோதரிகள் தெரிவித்ததுடன், 2023ம் ஆண்டு மாதாந்தம் ஒரு லட்சம் தொடக்கம் 75 ஆயிரம் ரூபாய் வரை தொடர்ச்சியாக கடந்த வருடம் மார்கழி மாதம் வரை பணம் அனுப்பியதாகவும் குறித்த பெண்ணின் சகோதரிகள் தெரிவித்தனர்.அத்தோடு குறித்த பெண்ணின் தொலைபேசியினை அவர் பணிபுரியும் வீட்டார் அபகரித்து வைத்துள்ளதாகவும் 5 நாட்களுக்கு ஒரு முறை மாத்திரம் குடும்பத்தாரிடம் கதைப்பதற்கு வழங்குவதாகவும் குறித்த பெண்ணின் சகோதரர்கள் தெரிவித்ததுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 25ஆம் தேதி தொடர்பு கொண்டதன் பின்னர் ஒரு வருடங்கள் தற்பொழுது கடந்தும் என்ன நடந்தது என்று தெரியாமலும் தொடர்பு கொள்வதற்கான வழிகளும் இல்லாமல் அவதியுறுவதாகவும் தெரிவித்தனர்.குறித்த பெண்ணுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதுடன் தற்போது அந்த குழந்தைகள் அவரது தாய் மற்றும் சகோதரிகளின் அரவணைப்பில் வாழ்வதாகவும் தெரிவித்தனர். குறித்த பெண்ணை நாட்டிற்கு மீள கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் தங்களால் எது வித நடவடிக்கைகளையும் சிறப்பாக கொண்டு செல்ல முடியவில்லை எனவும் கவலை தெரிவித்தனர். குறித்த பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவரிடம் அவரது விடயங்கள் தொடர்பாக கேட்பதற்கு தொடர்புகளை மேற்கொண்ட போதும் அவர்களுக்கு எதுவும் தெரியாது எனவும் சற்று வேலையாக இருக்கின்றோம் இப்பொழுது கதைக்க முடியாது எனவும் அலட்சியமாக பேசுவதாகவும் தெரிவித்தனர். பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் செல்லாது போலி ஆவங்கள் ஆவணங்களைக் கொண்டே இந்த பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் குறித்த பெண்ணை மீட்டெடுப்பதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தில் சென்று விசாரித்த போதும் இவர் உரிய முறையில் செல்லவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்ணின் கடவுச்சீட்டின் இலக்கத்தை வழங்கினால் மாத்திரமே தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்ததாக சகோதரிகள் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லாது வீட்டில் இருந்ததாகவும் இதனால் பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி உணவு போன்ற விடயங்களில் சிரமத்தை எதிர்நோக்கியதன் விளைவாகவே குறித்த பெண் வெளிநாடு செல்ல முயற்சித்ததாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. குறித்த பெண்ணை மீட்டு தருமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement