• Nov 24 2024

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்...! விடுவிக்க கோரி வேலை நிறுத்தத்தில் குதித்த இராமேஸ்வரம் மீனவர்கள்...!

Sharmi / Jun 24th 2024, 10:22 am
image

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  நேற்றுமுன்தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 600க்கு மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்

இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து மூன்று விசைப்படகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கை சிறையில் உள்ள படகுகளையும் மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனால், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதோடு, நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000 மேற்பட்ட மீன்பிடி தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள். விடுவிக்க கோரி வேலை நிறுத்தத்தில் குதித்த இராமேஸ்வரம் மீனவர்கள். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தமிழகத்தின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  நேற்றுமுன்தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 600க்கு மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து மூன்று விசைப்படகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, இலங்கை சிறையில் உள்ள படகுகளையும் மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்இதனால், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதோடு, நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000 மேற்பட்ட மீன்பிடி தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement