• Mar 31 2025

பேஸ்புக்கில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திவிட்டு உயிர்மாய்த்த இளைஞன்..!

Chithra / Jan 16th 2024, 8:47 am
image

 

அனுராதபுரத்தில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் 37 வயதான பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் நேற்று காலை உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்னர் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தையும் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இது குறித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விசாரித்த போது வீட்டின் முன்புறம் உள்ள கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அறிவித்துள்ளனர். 

சடலம் கலென்பிந்துனுவெவ, யகல்ல பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பேஸ்புக்கில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திவிட்டு உயிர்மாய்த்த இளைஞன்.  அனுராதபுரத்தில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் 37 வயதான பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நபர் நேற்று காலை உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்னர் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தையும் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.இது குறித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விசாரித்த போது வீட்டின் முன்புறம் உள்ள கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.பின்னர் இது தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அறிவித்துள்ளனர். சடலம் கலென்பிந்துனுவெவ, யகல்ல பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement