• May 18 2024

கொழும்பின் முக்கிய பகுதியில் பரபரப்பு..! தனியார் நிறுவனமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு..! samugammedia

Chithra / Oct 17th 2023, 11:44 am
image

Advertisement

 வெலிக்கடை, பழைய கோட்டே வீதி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுவனத்தின் குளியலறையின் ஜன்னல் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத்தின் முகாமையாளரால் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து சம்பவ இடத்திலிருந்து 9 மில்லிமீற்றர் ரக ரவையின் பகுதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை அச்சுறுத்தும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கொழும்பின் முக்கிய பகுதியில் பரபரப்பு. தனியார் நிறுவனமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு. samugammedia  வெலிக்கடை, பழைய கோட்டே வீதி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நிறுவனத்தின் குளியலறையின் ஜன்னல் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத்தின் முகாமையாளரால் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து சம்பவ இடத்திலிருந்து 9 மில்லிமீற்றர் ரக ரவையின் பகுதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை அச்சுறுத்தும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement