• Nov 26 2024

கொழும்பில் பயங்கரம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 வயது இளைஞன் கொலை

Chithra / Nov 26th 2024, 10:17 am
image

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலை சம்பவமானது கிராண்ட்பாஸ் பொலிஸார் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் நேற்று  காலை இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினருக்கு இடையே நிலவிய முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவற்துள்ளது.

உயிரிழந்த குறித்த இளைஞர் வீட்டில் இருந்த போது கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல், வீட்டில் இருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வெஹரகொடெல்ல வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இக்கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொலையுடன் தொடர்புடைய 03 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 02 வாள்களையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31, 32 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பயங்கரம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 வயது இளைஞன் கொலை கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த கொலை சம்பவமானது கிராண்ட்பாஸ் பொலிஸார் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் நேற்று  காலை இடம்பெற்றுள்ளது.இரு தரப்பினருக்கு இடையே நிலவிய முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவற்துள்ளது.உயிரிழந்த குறித்த இளைஞர் வீட்டில் இருந்த போது கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல், வீட்டில் இருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது வெஹரகொடெல்ல வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இக்கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொலையுடன் தொடர்புடைய 03 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 02 வாள்களையும் மீட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31, 32 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement