• May 18 2024

வவுனியாவில் பயங்கரம்; வீடு புகுந்து வாள்வெட்டு - குடும்ப பெண் எரித்துக் கொலை - 9 பேர் காயம் samugammedia

Chithra / Jul 23rd 2023, 9:57 am
image

Advertisement

வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாள் வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

மேலும் 9 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கடமாகவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கும் சுரேஸ் என்பவரது வீட்டில் பிறந்த நாள் நிகழ்வு இடம்பெற்றவிருந்த நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 24 வயதுடைய இளம் குடும்ப பெண் உயிரிழந்ததோடு அங்கிருந்த 9 பேர் எரிகாயங்கள் மற்றும் வாள் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

02 வயதுடைய குழந்தை, 07 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் தீயில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



வவுனியாவில் பயங்கரம்; வீடு புகுந்து வாள்வெட்டு - குடும்ப பெண் எரித்துக் கொலை - 9 பேர் காயம் samugammedia வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாள் வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.மேலும் 9 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கடமாகவுள்ளதாகவும் தெரியவருகின்றது.வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கும் சுரேஸ் என்பவரது வீட்டில் பிறந்த நாள் நிகழ்வு இடம்பெற்றவிருந்த நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது 24 வயதுடைய இளம் குடும்ப பெண் உயிரிழந்ததோடு அங்கிருந்த 9 பேர் எரிகாயங்கள் மற்றும் வாள் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.02 வயதுடைய குழந்தை, 07 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் தீயில் சிக்கி காயமடைந்துள்ளனர்.இந்நிலையில குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement