• Nov 19 2024

தலைமன்னார் செல்வேரி குடிநீர் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு..!

Sharmi / Sep 7th 2024, 4:59 pm
image

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட செல்வேரி குடிநீர் திட்டம் இன்றைய தினம்(07) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் செல்வேரி பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்டநாட்களாக குடிநீர் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தின் 54 காலாட்படையின் ஒழுங்கமைப்பில் நாளுக்கு 6,000 லீற்றர் குடிநீரை பெறும் வகையில் குறித்த குடிநீர்திட்டம் அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வன்னி பிராந்திய கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் J.P.C.பீரிஸ் மற்றும் 54 காலாட்படைபிரிவின் பொறுப்பதிகாரி  மேஜர் ஜெனரல் R.P.A.R.P  ராஜபக்ஸ மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு குறித்த குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

தலைமன்னார் செல்வேரி குடிநீர் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு. மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட செல்வேரி குடிநீர் திட்டம் இன்றைய தினம்(07) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.மன்னார் செல்வேரி பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்டநாட்களாக குடிநீர் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தின் 54 காலாட்படையின் ஒழுங்கமைப்பில் நாளுக்கு 6,000 லீற்றர் குடிநீரை பெறும் வகையில் குறித்த குடிநீர்திட்டம் அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் வன்னி பிராந்திய கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் J.P.C.பீரிஸ் மற்றும் 54 காலாட்படைபிரிவின் பொறுப்பதிகாரி  மேஜர் ஜெனரல் R.P.A.R.P  ராஜபக்ஸ மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு குறித்த குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement