• May 14 2025

தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு

Chithra / May 13th 2025, 12:26 pm
image


வலிந்துகாணமால் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா இலுப்பையடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.


அத்தோடு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.


இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக, வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும், வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் இன்று காலை 11 மணியளவில் வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர்  வருகைதந்து கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

 


அத்தோடு முல்லைத்தீவு   முள்ளியவளை  சந்தியம்மன் ஆலயம் முன்பாக முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களான ஞா.யூட்பிரசாத் மற்றும் த.அமலன், சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள்  இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்


மேலும்  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில்  நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.


தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வலிந்துகாணமால் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா இலுப்பையடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.அத்தோடு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக, வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது.தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும், வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.அந்தவகையில் இன்று காலை 11 மணியளவில் வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர்  வருகைதந்து கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு முல்லைத்தீவு   முள்ளியவளை  சந்தியம்மன் ஆலயம் முன்பாக முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களான ஞா.யூட்பிரசாத் மற்றும் த.அமலன், சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள்  இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்மேலும்  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில்  நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement