• May 02 2024

2027ஆம் ஆண்டுக்குள் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றுவதே நோக்கம்...! கல்வி அமைச்சர் தெரிவிப்பு...!samugammedia

Sharmi / Oct 11th 2023, 3:14 pm
image

Advertisement

எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆசிரியர்களையும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்புவதே நோக்கமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.

யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் முன்பள்ளி, பாடசாலை, தொழிற்கல்வி மற்றும் உயர்தரம் ஆகிய நான்கு கல்வித் துறைகளும் சர்வதேச மட்டத்திற்கு சமாந்தரமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இலங்கையின் முன்பள்ளிக் கல்வி, பொதுப் பாடசாலைக் கல்வி, தொழிற்பயிற்சிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய நான்கு துறைகளும் ஏனைய முன்னேறிய நாடுகளின் கல்வி முறைமைகளுக்கு ஏற்ப பாடநெறிகள் மற்றும் வளங்களுக்கு இணையாக அபிவிருத்தி செய்யப்படும்.

இலங்கையிலுள்ள 19 கல்லூரிகளும் 8 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஆசிரியர் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவவுள்ளதாகவும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியானது யாழ். வடமாகாணத்தில் வாழும் ஆசிரியர் பயிலுனர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2027 ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பயிற்சியுடன் பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்புவதே தமது நம்பிக்கை என அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் இருந்து முறையான தொழில்சார் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்று, சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான பரந்த வாய்ப்புகளை இந்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டுக்குள் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றுவதே நோக்கம். கல்வி அமைச்சர் தெரிவிப்பு.samugammedia எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆசிரியர்களையும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்புவதே நோக்கமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் முன்பள்ளி, பாடசாலை, தொழிற்கல்வி மற்றும் உயர்தரம் ஆகிய நான்கு கல்வித் துறைகளும் சர்வதேச மட்டத்திற்கு சமாந்தரமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.இலங்கையின் முன்பள்ளிக் கல்வி, பொதுப் பாடசாலைக் கல்வி, தொழிற்பயிற்சிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய நான்கு துறைகளும் ஏனைய முன்னேறிய நாடுகளின் கல்வி முறைமைகளுக்கு ஏற்ப பாடநெறிகள் மற்றும் வளங்களுக்கு இணையாக அபிவிருத்தி செய்யப்படும்.இலங்கையிலுள்ள 19 கல்லூரிகளும் 8 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஆசிரியர் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவவுள்ளதாகவும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியானது யாழ். வடமாகாணத்தில் வாழும் ஆசிரியர் பயிலுனர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2027 ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பயிற்சியுடன் பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்புவதே தமது நம்பிக்கை என அமைச்சர் நினைவு கூர்ந்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் இருந்து முறையான தொழில்சார் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்று, சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான பரந்த வாய்ப்புகளை இந்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement