தொழில் சங்கங்களின் ஒருமித்த ஆதரவுடன் ஆட்சிப் பீடமேறிய இன்றைய அநுர தலைமையிலான அரசும் கடந்த கால அரசுகள் போலவே எம்மை தமக்கான பொம்மைகளாக பயன்படுத்த முனைகின்றது என வடமாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்வரும் மே தின ஏற்பாடுகள் குறித்து யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(29) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மே தினத்தை முன்னெடுத்து வருகின்றது.
இம்முறை காலச் சூழல் காரணமாக பிரமாண்டமன முறையில் மேதின எழுச்சி பேரணியை முன்னெடுக்க முடியாத நிலை இருப்பதனால், நல்லூர் முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் எழுச்சி பேரணியானது ஆரியகுளம் சந்தியை சென்றடைந்து ஸ்ரான்லி வீதியூடாக யாழ் நகரை சென்றடைந்து அதன் பின் யாழ் மாவட்ட செயலகம் சென்றடைந்து YMCA மண்டபத்தில் பேரணி கூட்டம் நடைபெறவுள்ளது.
நாம் இம்முறை 12 தொழிற் சங்கங்களின் ஒத்துழைப்புடன் குறித்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.
அந்த வகையில் இன்றைய அரசின் இத்தகைய போக்கை சுட்டிக்காட்டும் வகையில் கோசங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த கால ஆட்சியாளர்கள் போல செயற்படும் அநுர அரசு: தொழிற் சங்கங்களின் சம்மேளனம் குற்றச்சாட்டு. தொழில் சங்கங்களின் ஒருமித்த ஆதரவுடன் ஆட்சிப் பீடமேறிய இன்றைய அநுர தலைமையிலான அரசும் கடந்த கால அரசுகள் போலவே எம்மை தமக்கான பொம்மைகளாக பயன்படுத்த முனைகின்றது என வடமாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.எதிர்வரும் மே தின ஏற்பாடுகள் குறித்து யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(29) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,வடமாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மே தினத்தை முன்னெடுத்து வருகின்றது.இம்முறை காலச் சூழல் காரணமாக பிரமாண்டமன முறையில் மேதின எழுச்சி பேரணியை முன்னெடுக்க முடியாத நிலை இருப்பதனால், நல்லூர் முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் எழுச்சி பேரணியானது ஆரியகுளம் சந்தியை சென்றடைந்து ஸ்ரான்லி வீதியூடாக யாழ் நகரை சென்றடைந்து அதன் பின் யாழ் மாவட்ட செயலகம் சென்றடைந்து YMCA மண்டபத்தில் பேரணி கூட்டம் நடைபெறவுள்ளது. நாம் இம்முறை 12 தொழிற் சங்கங்களின் ஒத்துழைப்புடன் குறித்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.அந்த வகையில் இன்றைய அரசின் இத்தகைய போக்கை சுட்டிக்காட்டும் வகையில் கோசங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.