• Apr 28 2024

காதலை எதிர்த்த தாயைக் கொன்று சூட்கேசுக்குள் அடைத்த இளம் பெண்னின் கொடூர செயல்! samugammedia

Tamil nila / Jun 8th 2023, 4:03 pm
image

Advertisement

இளம்பெண் ஒருவர் தன் சொந்த தாயைக் கொன்று சூட்கேசில் அடைத்ததைத் தொடர்ந்து, சூட்கேஸ் கில்லர் என்றே அழைக்கப்படுகிறார். உலகையே கலங்கடித்த அந்த வழக்கு இப்போது மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் தன் பெற்றோருடன், குறிப்பாக தனது தாயுடன் எப்போதும் சண்டை போடும் ஹீதர் வீட்டுக்கு, 80க்கும் அதிகமான முறை பொலிசார் அழைக்கப்படும் அளவுக்கு எப்போதும் சண்டையிடும் குடும்பம் அது.

2006 ஆம் ஆண்டு  ஹீதரின் தந்தை மரணமடைய, அவருக்கும் அவரது தாயான ஷீலாவுக்கும் இடையிலான உரசல் அதிகமாகியுள்ளது. சரியான வேலையில்லாத டாமி (Tommy Schaefer) என்னும் நபரைக் காதலிக்கத் துவங்கிய ஹீதர் படிப்பையும் நிறுத்தியிருக்கிறார்.


அவர் கர்ப்பமும் அடைய, அவரை இந்தோனேசியாவின் பாலித் தீவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற ஷீலா, கருக்கலைப்புச் செய்யுமாறு மகளுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.

ஏற்கனவே தன் தாய் மீது ஹீதர் வெறுப்பில் இருந்த நிலையில் அவர் தன் வயிற்றில் வளரும் பிள்ளையைக் கருக்கலைப்பு செய்யச் சொல்ல, ஆத்திரமடைந்த ஹீதர், தன் தாயின் கிரெடிட் கார்டைத் திருடி, தன் காதலனுக்கு ஒரு பயணச்சீட்டை வாங்கி அவரை பாலிக்கு வரவழைத்துள்ளார்.

இருவருமாக சேர்ந்து ஷீலாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.

அத்துடன்  இருவரும் சேர்ந்து ஷீலாவைக் கொன்று ஒரு சூட்கேசில் அடைத்து, அதை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு செல்ல, கார் சாரதி சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஹீதரும் டாமியும் கைது செய்யப்பட்டு பாலியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் நடந்தது 2014ஆம் ஆண்டு.

2021ஆம் ஆண்டு, நன்னடத்தை காரணமாக ஹீதர் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பாலி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், சிறையில் பிறந்த தன் மகளுடன் புதிய வாழ்வு ஒன்றைத் துவக்கத் திட்டமிட்டுள்ளார். 

ஆனால், அமெரிக்கப் பொலிசார் அவரை அமெரிக்காவுக்குத் திரும்பி வரச் சொல்லியிருக்கிறார்கள். அமெரிக்காவின் சிக்காகோ விமான நிலையத்தில் கால் வைத்த ஹீதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவில் மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார் ஹீதர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இம் மாதம், அதாவது ஜூன் 15 அன்று, மீண்டும் ஹீதர் வழக்கு விசாரணை துவங்க இருக்கிறது


காதலை எதிர்த்த தாயைக் கொன்று சூட்கேசுக்குள் அடைத்த இளம் பெண்னின் கொடூர செயல் samugammedia இளம்பெண் ஒருவர் தன் சொந்த தாயைக் கொன்று சூட்கேசில் அடைத்ததைத் தொடர்ந்து, சூட்கேஸ் கில்லர் என்றே அழைக்கப்படுகிறார். உலகையே கலங்கடித்த அந்த வழக்கு இப்போது மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தன் பெற்றோருடன், குறிப்பாக தனது தாயுடன் எப்போதும் சண்டை போடும் ஹீதர் வீட்டுக்கு, 80க்கும் அதிகமான முறை பொலிசார் அழைக்கப்படும் அளவுக்கு எப்போதும் சண்டையிடும் குடும்பம் அது.2006 ஆம் ஆண்டு  ஹீதரின் தந்தை மரணமடைய, அவருக்கும் அவரது தாயான ஷீலாவுக்கும் இடையிலான உரசல் அதிகமாகியுள்ளது. சரியான வேலையில்லாத டாமி (Tommy Schaefer) என்னும் நபரைக் காதலிக்கத் துவங்கிய ஹீதர் படிப்பையும் நிறுத்தியிருக்கிறார். அவர் கர்ப்பமும் அடைய, அவரை இந்தோனேசியாவின் பாலித் தீவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற ஷீலா, கருக்கலைப்புச் செய்யுமாறு மகளுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.ஏற்கனவே தன் தாய் மீது ஹீதர் வெறுப்பில் இருந்த நிலையில் அவர் தன் வயிற்றில் வளரும் பிள்ளையைக் கருக்கலைப்பு செய்யச் சொல்ல, ஆத்திரமடைந்த ஹீதர், தன் தாயின் கிரெடிட் கார்டைத் திருடி, தன் காதலனுக்கு ஒரு பயணச்சீட்டை வாங்கி அவரை பாலிக்கு வரவழைத்துள்ளார்.இருவருமாக சேர்ந்து ஷீலாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.அத்துடன்  இருவரும் சேர்ந்து ஷீலாவைக் கொன்று ஒரு சூட்கேசில் அடைத்து, அதை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு செல்ல, கார் சாரதி சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.அதைத் தொடர்ந்து ஹீதரும் டாமியும் கைது செய்யப்பட்டு பாலியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் நடந்தது 2014ஆம் ஆண்டு.2021ஆம் ஆண்டு, நன்னடத்தை காரணமாக ஹீதர் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பாலி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், சிறையில் பிறந்த தன் மகளுடன் புதிய வாழ்வு ஒன்றைத் துவக்கத் திட்டமிட்டுள்ளார். ஆனால், அமெரிக்கப் பொலிசார் அவரை அமெரிக்காவுக்குத் திரும்பி வரச் சொல்லியிருக்கிறார்கள். அமெரிக்காவின் சிக்காகோ விமான நிலையத்தில் கால் வைத்த ஹீதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வெளிநாடு ஒன்றில் குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவில் மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார் ஹீதர்.குறித்த சம்பவம் தொடர்பில் இம் மாதம், அதாவது ஜூன் 15 அன்று, மீண்டும் ஹீதர் வழக்கு விசாரணை துவங்க இருக்கிறது

Advertisement

Advertisement

Advertisement