களுத்துறை - ஹொரணை, பண்டாரவத்தை பகுதியில் தலையில் தேங்காய் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிற்கு அருகிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பலத்த காயங்களுடன் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெண்ணின் உயிரை காவுவாங்கிய தேங்காய்; களுத்துறையில் சோகம் களுத்துறை - ஹொரணை, பண்டாரவத்தை பகுதியில் தலையில் தேங்காய் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனது வீட்டிற்கு அருகிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பலத்த காயங்களுடன் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.