• Jun 18 2024

கோழியால் வந்த குழப்பம்..! – அயல் வீட்டுக்காரரை கண்ணாடி போத்தலால் குத்திய இளைஞர்..! பெரும் பதற்றம் samugammedia

Chithra / Nov 30th 2023, 1:13 pm
image

Advertisement

 

கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்ததையடுத்து  இரு வீட்டாருக்கிடையில் ஏற்பட்ட மோதலில்  ஒருவரை போத்தலால் குத்தியதாகக் கூறப்படும்  நபரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெனிபெத்திகொட, கம்வத்தகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரது குடும்பமும் காயமடைந்தவரின் குடும்பமும் ஒரே கிணற்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில்,  இரண்டு நாட்களுக்கு முன்னர் கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்ததால், அதனை யார் வெளியே எடுத்து கிணற்றைச்  சுத்தம் செய்வது என்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு இரு தரப்பினருக்குமிடையே  மோதலாக மாறி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோழியால் வந்த குழப்பம். – அயல் வீட்டுக்காரரை கண்ணாடி போத்தலால் குத்திய இளைஞர். பெரும் பதற்றம் samugammedia  கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்ததையடுத்து  இரு வீட்டாருக்கிடையில் ஏற்பட்ட மோதலில்  ஒருவரை போத்தலால் குத்தியதாகக் கூறப்படும்  நபரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெனிபெத்திகொட, கம்வத்தகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவரது குடும்பமும் காயமடைந்தவரின் குடும்பமும் ஒரே கிணற்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில்,  இரண்டு நாட்களுக்கு முன்னர் கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்ததால், அதனை யார் வெளியே எடுத்து கிணற்றைச்  சுத்தம் செய்வது என்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு இரு தரப்பினருக்குமிடையே  மோதலாக மாறி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement