• May 19 2024

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம் ஒரு சதி! samugammedia

Chithra / Jul 19th 2023, 3:39 pm
image

Advertisement

சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்காமல் காலதாமதம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தேவைக்கேற்ப ஐந்து உறுப்பினர்களை ஆணைக்குழுவிற்கு நியமிப்பதை விட மூவரில் இருவரிடமிருந்து அனுமதியைப் பெற்று தேர்தல் தொடர்பான முக்கியமான முடிவுகளை எட்டுவது இலகுவானது என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இவ்வாறானதொரு சதி இடம்பெறுவது கவலையளிக்கின்றது எனவும் கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில் இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்பு சபையின் பொறுப்பாகும் அதேவேளை ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுவதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அன்றாட நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார்.

விரைவில் அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம் ஒரு சதி samugammedia சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்காமல் காலதாமதம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.தேவைக்கேற்ப ஐந்து உறுப்பினர்களை ஆணைக்குழுவிற்கு நியமிப்பதை விட மூவரில் இருவரிடமிருந்து அனுமதியைப் பெற்று தேர்தல் தொடர்பான முக்கியமான முடிவுகளை எட்டுவது இலகுவானது என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இவ்வாறானதொரு சதி இடம்பெறுவது கவலையளிக்கின்றது எனவும் கஜநாயக்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில் இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்பு சபையின் பொறுப்பாகும் அதேவேளை ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுவதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் அன்றாட நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார்.விரைவில் அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement