• May 18 2024

வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு; பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia

Chithra / Aug 5th 2023, 9:54 am
image

Advertisement

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி  வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட  பிரதான சந்தேகநபரை  நேற்று வெள்ளிக்கிழமை (04) வவுனியா சட்ட வைத்திய  அதிகாரியிடம் முற்படுதிய பின்னர்  வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில்  குற்ற புலனாய்வுத்திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர்  ஆஜர்படுத்தினர்.

இதன்போதே, சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை  அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான்  அஹமட் ரசீம்  உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில், சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர் சம்பவம் நடைபெற்ற அன்று   தனது பிள்ளைக்கு சுகயீனம் காரணமாக   சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக,   யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருந்ததாகவும், சம்பவதினத்தன்று அவர் வவுனியாவில் இல்லை என்றும்,  சந்தேகநபரின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம்  செலுத்துமாறும் சந்தேகநபர் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை  குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரனை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ்காஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார  ஆகியோர் இணைந்து       மன்றுக்கு முற்படுத்தினர். பின்னர்   சந்தேகநபர்  அனுராதபுரம் சிறைச்சாலை  உத்தியோகத்திரிடம் ஒப்படைக்கப்பட்டது.


வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு; பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி  வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கைது செய்யப்பட்ட  பிரதான சந்தேகநபரை  நேற்று வெள்ளிக்கிழமை (04) வவுனியா சட்ட வைத்திய  அதிகாரியிடம் முற்படுதிய பின்னர்  வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில்  குற்ற புலனாய்வுத்திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர்  ஆஜர்படுத்தினர்.இதன்போதே, சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை  அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான்  அஹமட் ரசீம்  உத்தரவிட்டார்.கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில், சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர் சம்பவம் நடைபெற்ற அன்று   தனது பிள்ளைக்கு சுகயீனம் காரணமாக   சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக,   யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருந்ததாகவும், சம்பவதினத்தன்று அவர் வவுனியாவில் இல்லை என்றும்,  சந்தேகநபரின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம்  செலுத்துமாறும் சந்தேகநபர் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை  குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரனை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ்காஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார  ஆகியோர் இணைந்து       மன்றுக்கு முற்படுத்தினர். பின்னர்   சந்தேகநபர்  அனுராதபுரம் சிறைச்சாலை  உத்தியோகத்திரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement