• Jun 02 2024

வவுனியாவை வந்தடைந்த பொகவந்தலாவை இரட்டையர்களின் சாதனை பயணம்..!samugammedia

Sharmi / Jun 14th 2023, 3:11 pm
image

Advertisement

பொகவந்தலாவை - கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர்கள் இன்று (14.06.2023) அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து 9 மணித்தியாலங்களில் மதியம் 01.00 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்து தொடர்ச்சியாக பயணத்தினை தொடர்ந்தனர்.

இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை படைக்கவுள்ளனர்.

இதேவேளை இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்தும் , புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோமீட்டர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் பயணித்து சாதனை படைத்துள்ளதுடன், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோமீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


வவுனியாவை வந்தடைந்த பொகவந்தலாவை இரட்டையர்களின் சாதனை பயணம்.samugammedia பொகவந்தலாவை - கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர்கள் இன்று (14.06.2023) அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து 9 மணித்தியாலங்களில் மதியம் 01.00 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்து தொடர்ச்சியாக பயணத்தினை தொடர்ந்தனர்.இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை படைக்கவுள்ளனர்.இதேவேளை இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்தும் , புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோமீட்டர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் பயணித்து சாதனை படைத்துள்ளதுடன், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோமீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement