• May 03 2024

வெளிநாட்டு மோகத்தால் ஏற்பட்ட கதி..! இலங்கையர்களை பணயக் கைதிகளாக்கிய பாகிஸ்தானியர்கள்..!

Chithra / Apr 7th 2024, 9:19 am
image

Advertisement

 

பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி நான்கு இலங்கையர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 04 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாள குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய பிரஜைகள், கனடா மற்றும் ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான தகவல் கொடுத்து நான்கு இலங்கையர்களிடம் பணம் பெற்றுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிய பிரஜைகளால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட நான்கு இலங்கையர்களும் அவர்களது வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் பறிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நான்கு இலங்கையர்களையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேபாள பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கடத்தல் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மோகத்தால் ஏற்பட்ட கதி. இலங்கையர்களை பணயக் கைதிகளாக்கிய பாகிஸ்தானியர்கள்.  பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி நான்கு இலங்கையர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 04 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேபாள குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய பிரஜைகள், கனடா மற்றும் ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான தகவல் கொடுத்து நான்கு இலங்கையர்களிடம் பணம் பெற்றுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தானிய பிரஜைகளால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட நான்கு இலங்கையர்களும் அவர்களது வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் பறிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.நான்கு இலங்கையர்களையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேபாள பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் கடத்தல் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement