• May 10 2024

கோடை வெயிலின் உக்கிரம்- அடுப்பே இல்லாமல் ஆம்லெட் செய்த நபர்... வைரலாகும் புகைப்படங்கள்! samugammedia

Tamil nila / Apr 22nd 2023, 8:34 pm
image

Advertisement

கடந்த சில வாரங்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சில நிமிடங்கள் வெயிலில் வெளியே சென்று விட்டு வந்தாலே தலை முதல் பாதம் வரை சில மணி நேரங்களுக்கு சூடாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

நாடு முழுவதும் இதே நிலை தான் என்றாலும் கிழக்கு மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக 40 டிகிரிக்கு அருகில் இருக்கிறது.



மேற்கு வங்க மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல. அங்கும் மிகவும் ஹாட்டான கிளைமேட் நிலவி வருகிறது. 

இந்த நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு நபர், கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை காண்பிக்க பரிசோதனை ஒன்றில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்று உள்ளார். இது தொடர்பான வீடியோ ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



வீடியோவில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர் தனது வீட்டின் மொட்டை மாடியில் சமைப்பதை காணலாம். இதில் ஆச்சரியம் என்னவெனில் அடுப்பு மற்றும் கேஸ் உதவி இல்லாமல் செய்து இவர் சிம்பிள் டிஷ்ஷான ஆம்லெட்டை சமைத்துள்ளார். எப்படி என்று யோசிக்கிறீர்களா.



எல்லாம் சூரிய வெப்பத்தை (கொளுத்தி எடுக்கும் வெயிலை) பயன்படுத்திதான். ஆம், முட்டையை அடுப்பு இல்லாமலேயே ஆம்லெட்டாக்கும் அளவிற்கு அங்கு வெயில் கொளுத்துகிறது. கொடூரமான வெப்ப அலைகள் காரணமாக அம்மாநில அரசு அங்கிருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.



குறிப்பிட்ட இந்த வைரல் வீடியோ மொட்டை மாடியில் மொபைல் கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த நேரத்தில் வானிலை எவ்வளவு சூடாக இருந்தது என்பதை வெளிப்படுத்த ஒரு பரிசோதனையை மேற்கொள்ளும் நபரின் ஸ்டோரியுடன் தொடங்குகிறது.



மொட்டை மாடி கைப்பிடி சுவரில் ஒரு Frying pan-ஐ வெயில் முழுவதும் நன்குபடுமாறு வைக்கிறார். பின்னர் கரண்டியால் முட்டையை உடைத்து அந்த pan-ல் ஊற்றுகிறார். அதை ஆம்லெட் ஷேப்பில் கொண்டு வர pan முழுவதும் உடைத்த முட்டையை கைகளால் அசைத்து பரவ செய்கிறார். 

பின் சில நிமிடங்கள் வெயிலில் அப்படியே விட்டு விடுகிறார். சூரியனின் அதீத வெப்பம் காரணமாக எண்ணெய் அல்லது கேஸ் இல்லாமல் முட்டை ஆம்லெட்டாக மாறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

உடைத்து ஊற்றிய முட்டை கொளுத்தும் வெயிலில் சில வினாடிகளில் ஆம்லெட்டாக மாறியிருப்பதை வீடியோவில் காட்டும் அந்த நபர், அதனை சாப்பிட்டு சுவை அற்புதமாக இருப்பதாக கூறுகிறார். இந்த வீடியோ நெட்டிசனைகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், "Omelette on the roof at 46 degrees. How?" என்ற கேப்ஷனுடன் வைரலாக பரவி வருகிறது.



தொடர்ந்து வைரலாகி வரும் இந்த வீடியோ கிளிப் லட்சக்கணக்கான வியூஸ் மற்றும் பல ரியாக்ஷன்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்துள்ளது.

கோடை வெயிலின் உக்கிரம்- அடுப்பே இல்லாமல் ஆம்லெட் செய்த நபர். வைரலாகும் புகைப்படங்கள் samugammedia கடந்த சில வாரங்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சில நிமிடங்கள் வெயிலில் வெளியே சென்று விட்டு வந்தாலே தலை முதல் பாதம் வரை சில மணி நேரங்களுக்கு சூடாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.நாடு முழுவதும் இதே நிலை தான் என்றாலும் கிழக்கு மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக 40 டிகிரிக்கு அருகில் இருக்கிறது.மேற்கு வங்க மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல. அங்கும் மிகவும் ஹாட்டான கிளைமேட் நிலவி வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு நபர், கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை காண்பிக்க பரிசோதனை ஒன்றில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்று உள்ளார். இது தொடர்பான வீடியோ ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.வீடியோவில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர் தனது வீட்டின் மொட்டை மாடியில் சமைப்பதை காணலாம். இதில் ஆச்சரியம் என்னவெனில் அடுப்பு மற்றும் கேஸ் உதவி இல்லாமல் செய்து இவர் சிம்பிள் டிஷ்ஷான ஆம்லெட்டை சமைத்துள்ளார். எப்படி என்று யோசிக்கிறீர்களா.எல்லாம் சூரிய வெப்பத்தை (கொளுத்தி எடுக்கும் வெயிலை) பயன்படுத்திதான். ஆம், முட்டையை அடுப்பு இல்லாமலேயே ஆம்லெட்டாக்கும் அளவிற்கு அங்கு வெயில் கொளுத்துகிறது. கொடூரமான வெப்ப அலைகள் காரணமாக அம்மாநில அரசு அங்கிருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.குறிப்பிட்ட இந்த வைரல் வீடியோ மொட்டை மாடியில் மொபைல் கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த நேரத்தில் வானிலை எவ்வளவு சூடாக இருந்தது என்பதை வெளிப்படுத்த ஒரு பரிசோதனையை மேற்கொள்ளும் நபரின் ஸ்டோரியுடன் தொடங்குகிறது.மொட்டை மாடி கைப்பிடி சுவரில் ஒரு Frying pan-ஐ வெயில் முழுவதும் நன்குபடுமாறு வைக்கிறார். பின்னர் கரண்டியால் முட்டையை உடைத்து அந்த pan-ல் ஊற்றுகிறார். அதை ஆம்லெட் ஷேப்பில் கொண்டு வர pan முழுவதும் உடைத்த முட்டையை கைகளால் அசைத்து பரவ செய்கிறார். பின் சில நிமிடங்கள் வெயிலில் அப்படியே விட்டு விடுகிறார். சூரியனின் அதீத வெப்பம் காரணமாக எண்ணெய் அல்லது கேஸ் இல்லாமல் முட்டை ஆம்லெட்டாக மாறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.உடைத்து ஊற்றிய முட்டை கொளுத்தும் வெயிலில் சில வினாடிகளில் ஆம்லெட்டாக மாறியிருப்பதை வீடியோவில் காட்டும் அந்த நபர், அதனை சாப்பிட்டு சுவை அற்புதமாக இருப்பதாக கூறுகிறார். இந்த வீடியோ நெட்டிசனைகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், "Omelette on the roof at 46 degrees. How" என்ற கேப்ஷனுடன் வைரலாக பரவி வருகிறது.தொடர்ந்து வைரலாகி வரும் இந்த வீடியோ கிளிப் லட்சக்கணக்கான வியூஸ் மற்றும் பல ரியாக்ஷன்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement