• Feb 04 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது!

Tharmini / Feb 3rd 2025, 3:46 pm
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அசாத் மௌலானா தொடர்பாகவும் அரசாங்கத்தின் பொய்யான பிரசாரம் தொடர்பாகவும் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக

தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என்று செனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இமாம் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அது குறித்த கடந்த ஒக்டோபர் மாதம் நாம் பகிரங்கப்படுத்தியிருந்தோம். அதில் பலவிடயங்களை தெரியப்படுத்தியிருந்தோம்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்தது.

இந்த தாக்குதல்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் அரசாங்கத்திற் குள்ளேயே உள்ளதனால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா செனல் 4 வுக்கு தெரிவித்திருந்தார். அவரை நாட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது”இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அசாத் மௌலானா தொடர்பாகவும் அரசாங்கத்தின் பொய்யான பிரசாரம் தொடர்பாகவும் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகதற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என்று செனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இமாம் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.அது குறித்த கடந்த ஒக்டோபர் மாதம் நாம் பகிரங்கப்படுத்தியிருந்தோம். அதில் பலவிடயங்களை தெரியப்படுத்தியிருந்தோம்.உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்தது.இந்த தாக்குதல்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் அரசாங்கத்திற் குள்ளேயே உள்ளதனால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா செனல் 4 வுக்கு தெரிவித்திருந்தார். அவரை நாட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும்முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது”இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement