• Jun 02 2024

எந்த நிறுவனத்தையும் அரசு விற்காது - ஆசுமாரசிங்க கூறுகின்றார்! samugammedia

Tamil nila / Apr 28th 2023, 6:46 am
image

Advertisement

"அரசின் எந்தச் சொத்துக்களையும் அரசு விற்காது. காணியின் - நிறுவனங்களின் உரிமையை வைத்துக்கொண்டு குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும்" - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"52 அரச நிறுவனங்கள் 2022 இல் அடைந்த நட்டம் 932 பில்லியனாகும். ரெலிகொம் நிறுவனம் 163 வயதைக் கொண்டது. இருந்தும், தொலைபேசி இணைப்பு ஒன்றைப் பெறுவதற்காக அன்று பாடுபட்டோம். இன்று அதன் பங்குகள் ஜப்பான் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டதால் அந்தப் பிரச்சினைகள் இல்லை. இலாபம் மீட்டும் நிறுவனமாக ரெலிகொம் மாறியுள்ளது. சேவைகளும் தரம்.

இருந்தும் ,அந்த நிறுவனத்திடம் இருக்கின்ற வளங்களுக்கு ஏற்ப இன்னும் இலாபம் மீட்ட முடியும். அதற்கு ஏற்ப அதை இன்னும் மறுசீரமைக்க வேண்டும்.

குறைந்த ஊழியர்களைக் கொண்ட டயலொக் நிறுவனம் அதிக இலாபம் பெறுகின்றது. கூடிய ஊழியர்களைக் கொண்ட ரெலிகொம் அதைவிடக் குறைந்த இலாபத்தையே பெறுகின்றது.

அதிக இலாபம் மீட்டும் நிறுவனமாக ரெலிகொம்மை மாற்ற வேண்டும் என்றால் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்." - என்றார்.

எந்த நிறுவனத்தையும் அரசு விற்காது - ஆசுமாரசிங்க கூறுகின்றார் samugammedia "அரசின் எந்தச் சொத்துக்களையும் அரசு விற்காது. காணியின் - நிறுவனங்களின் உரிமையை வைத்துக்கொண்டு குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும்" - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,"52 அரச நிறுவனங்கள் 2022 இல் அடைந்த நட்டம் 932 பில்லியனாகும். ரெலிகொம் நிறுவனம் 163 வயதைக் கொண்டது. இருந்தும், தொலைபேசி இணைப்பு ஒன்றைப் பெறுவதற்காக அன்று பாடுபட்டோம். இன்று அதன் பங்குகள் ஜப்பான் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டதால் அந்தப் பிரச்சினைகள் இல்லை. இலாபம் மீட்டும் நிறுவனமாக ரெலிகொம் மாறியுள்ளது. சேவைகளும் தரம்.இருந்தும் ,அந்த நிறுவனத்திடம் இருக்கின்ற வளங்களுக்கு ஏற்ப இன்னும் இலாபம் மீட்ட முடியும். அதற்கு ஏற்ப அதை இன்னும் மறுசீரமைக்க வேண்டும்.குறைந்த ஊழியர்களைக் கொண்ட டயலொக் நிறுவனம் அதிக இலாபம் பெறுகின்றது. கூடிய ஊழியர்களைக் கொண்ட ரெலிகொம் அதைவிடக் குறைந்த இலாபத்தையே பெறுகின்றது.அதிக இலாபம் மீட்டும் நிறுவனமாக ரெலிகொம்மை மாற்ற வேண்டும் என்றால் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement