• Sep 20 2024

நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளும் அரசின் நிலைப்பாடு; கண்டிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

Chithra / Jul 28th 2024, 8:49 am
image

Advertisement


அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி மேற்கொண்ட நியமனங்களை உயர்நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்ற அரசாங்கத்தின் கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை தொடர்பில், உயர் நீதிமன்றத்தினால் அண்மையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை இரத்து செய்ய பிரதமருக்கோ, சபாநாயகருக்கோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினருக்கோ அதிகாரம் இல்லை.

அரசியலமைப்பு பேரவையின் முடிவுகள் உயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் அதிகார வரம்பிற்குள் தெளிவாக இணங்குகின்றன.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து கடந்த 24ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து கடந்த 26ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை வழங்கிய அனுமதியை நீதிமன்றத்தால் மாற்ற முடியாது என குறிப்பிட்டார்.

இந்நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது எனவும், பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளும் அரசின் நிலைப்பாடு; கண்டிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி மேற்கொண்ட நியமனங்களை உயர்நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்ற அரசாங்கத்தின் கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை தொடர்பில், உயர் நீதிமன்றத்தினால் அண்மையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை இரத்து செய்ய பிரதமருக்கோ, சபாநாயகருக்கோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினருக்கோ அதிகாரம் இல்லை.அரசியலமைப்பு பேரவையின் முடிவுகள் உயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் அதிகார வரம்பிற்குள் தெளிவாக இணங்குகின்றன.தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து கடந்த 24ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து கடந்த 26ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை வழங்கிய அனுமதியை நீதிமன்றத்தால் மாற்ற முடியாது என குறிப்பிட்டார்.இந்நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது எனவும், பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement