• May 12 2024

மார்ச் மாதத்தில் அரசுக்கு தாங்க முடியாத கடன் சுமை! அமைச்சர் வெளியிட்ட தகவல் SamugamMedia

Chithra / Feb 22nd 2023, 11:15 am
image

Advertisement

மார்ச் மாதத்திற்கான அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் 173 பில்லியன் ரூபா எனவும் அரச உத்தியோகத்தர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் செழிப்பு மானியங்களுக்காக அரசாங்கம் எதிர்பார்க்கும் செலவு 196 பில்லியன் ரூபா எனவும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம், அமைச்சரவைப் பேச்சாளர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளாந்த செலவுகளுக்காக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய செலவுகளுக்காக மேலும் 23 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய நிதியமைச்சின் செயலாளர், மேலும் மார்ச் மாதத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சேவைக்காக 508 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மார்ச் மாதத்தில் அரசுக்கு தாங்க முடியாத கடன் சுமை அமைச்சர் வெளியிட்ட தகவல் SamugamMedia மார்ச் மாதத்திற்கான அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் 173 பில்லியன் ரூபா எனவும் அரச உத்தியோகத்தர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் செழிப்பு மானியங்களுக்காக அரசாங்கம் எதிர்பார்க்கும் செலவு 196 பில்லியன் ரூபா எனவும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம், அமைச்சரவைப் பேச்சாளர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நாளாந்த செலவுகளுக்காக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய செலவுகளுக்காக மேலும் 23 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய நிதியமைச்சின் செயலாளர், மேலும் மார்ச் மாதத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சேவைக்காக 508 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement