• May 18 2024

நயினை நாகபூசணியின் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்! samugammedia

Chithra / Jun 19th 2023, 7:44 am
image

Advertisement

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி இரவு சப்பரதத் திருவிழாவும், மறுநாளான ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், அடுத்த நாள் தீர்த்தத் திருவிழாவும் அன்று இரவு கொடியிறக்கமும் நடைபெறும்.

மறுநாள் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரசித்தி பெற்ற தெப்போற்சவம் நடைபெறவுள்ளது.

ஆலயத் திருவிழாவையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்துக்கு வருபவர்கள் கலாசார உடையணிந்து வருகை தருமாறு ஆலய நிர்வாகம் கேட்டுள்ளது.


நயினை நாகபூசணியின் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம் samugammedia வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி இரவு சப்பரதத் திருவிழாவும், மறுநாளான ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், அடுத்த நாள் தீர்த்தத் திருவிழாவும் அன்று இரவு கொடியிறக்கமும் நடைபெறும்.மறுநாள் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரசித்தி பெற்ற தெப்போற்சவம் நடைபெறவுள்ளது.ஆலயத் திருவிழாவையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்துக்கு வருபவர்கள் கலாசார உடையணிந்து வருகை தருமாறு ஆலய நிர்வாகம் கேட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement