• May 18 2024

13ஐ அமுல்படுத்தினால் இந்தோனேசியாவிற்கு ஏற்பட்ட நிலை உருவாகலாம்! – முக்கியஸ்தர் எச்சரிக்கை

Chithra / Feb 6th 2023, 10:11 am
image

Advertisement

பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி 90களில் இந்தோனேசியாவை பிளவுபடுத்திய மேற்கத்திய நாடுகளின் திட்டத்தில் இலங்கையும் பலியாக கூடாது என ஆளும்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தொடரும் கொடுப்பனவு நிலுவை மற்றும் கடன் நெருக்கடிகள் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால், கிழக்கு திமோர் சுதந்திரத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் போலவே அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் இந்தோனேசிய ஜனாதிபதி சுஹார்டோவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கும் சூழலை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவர், அத்திருத்தம் இலங்கையை இனரீதியாக பிளவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

13ஐ அமுல்படுத்தினால் இந்தோனேசியாவிற்கு ஏற்பட்ட நிலை உருவாகலாம் – முக்கியஸ்தர் எச்சரிக்கை பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி 90களில் இந்தோனேசியாவை பிளவுபடுத்திய மேற்கத்திய நாடுகளின் திட்டத்தில் இலங்கையும் பலியாக கூடாது என ஆளும்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.தொடரும் கொடுப்பனவு நிலுவை மற்றும் கடன் நெருக்கடிகள் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால், கிழக்கு திமோர் சுதந்திரத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் போலவே அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் இந்தோனேசிய ஜனாதிபதி சுஹார்டோவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கும் சூழலை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.எனவே பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவர், அத்திருத்தம் இலங்கையை இனரீதியாக பிளவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement