• May 18 2024

சர்வதேச போர்ச்சூழல் இலங்கைத்தீவில் உருவாக்கியுள்ளது.! சீனாவின் ஆதிக்கமே காரணம்.! samugammedia

Sharmi / Apr 19th 2023, 2:59 pm
image

Advertisement

சர்வதேசத்திற்கு அகிம்சையை போதிக்கு வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழர்களுக்காக தன்னை தியாகம் செய்த ஒரு தாயாக, அன்னை பூபதி அம்மா உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.

இன்று 2250 நாளாக தாய்மாரும் தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் தமிழர்களுக்கு ஒரு தீர்விற்காகவும் தொடர்ந்து உலகத்திற்கு அகிம்சையை போதிக்கும் வழியில்

இந்த தாய்மாரும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு தங்களுடைய பிள்ளைகளை தேடிக்கொண்டிருப்பதாக கோ.ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை சீனாவிற்கு வழங்கி இலங்கையில் ராடர் தளங்களை நிறுவுவது, சர்வதேச போர்ச்சூழலை இலங்கைத்தீவில் உருவாக்கியுள்ளதாக கோ.ராஜ்குமார் குறிப்பிட்டிருந்தார்.

இனவாதிகளும் இனப்படுகொலை அரசியல் வாதிகளும் சேர்ந்து சர்வதேச போர்ச்சூழலுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். இதற்கான விளைவுகளை ஏற்கனவே இதற்கான எச்சரிக்கையாக பொருளாதார நெருக்கடியை சிங்கள மக்கள் உணர்ந்தவர்களாக தெரியவில்லை.

தொடர்ந்தும் இந்துக்கோயில்களின் ஆக்கிரமிப்பிற்கும், அமைதியாக இருந்து கொண்டு அரசியல்வாதிகளையும், இனவாதிகளையும் அவர்கள் ஊக்குவித்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

சர்வதேச போர்ச்சூழல் இலங்கைத்தீவில் உருவாக்கியுள்ளது. சீனாவின் ஆதிக்கமே காரணம். samugammedia சர்வதேசத்திற்கு அகிம்சையை போதிக்கு வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.இன்று அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.தமிழர்களுக்காக தன்னை தியாகம் செய்த ஒரு தாயாக, அன்னை பூபதி அம்மா உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இன்று 2250 நாளாக தாய்மாரும் தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் தமிழர்களுக்கு ஒரு தீர்விற்காகவும் தொடர்ந்து உலகத்திற்கு அகிம்சையை போதிக்கும் வழியில் இந்த தாய்மாரும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு தங்களுடைய பிள்ளைகளை தேடிக்கொண்டிருப்பதாக கோ.ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை சீனாவிற்கு வழங்கி இலங்கையில் ராடர் தளங்களை நிறுவுவது, சர்வதேச போர்ச்சூழலை இலங்கைத்தீவில் உருவாக்கியுள்ளதாக கோ.ராஜ்குமார் குறிப்பிட்டிருந்தார்.இனவாதிகளும் இனப்படுகொலை அரசியல் வாதிகளும் சேர்ந்து சர்வதேச போர்ச்சூழலுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். இதற்கான விளைவுகளை ஏற்கனவே இதற்கான எச்சரிக்கையாக பொருளாதார நெருக்கடியை சிங்கள மக்கள் உணர்ந்தவர்களாக தெரியவில்லை. தொடர்ந்தும் இந்துக்கோயில்களின் ஆக்கிரமிப்பிற்கும், அமைதியாக இருந்து கொண்டு அரசியல்வாதிகளையும், இனவாதிகளையும் அவர்கள் ஊக்குவித்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement