பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் பிரச்சினை தொடர்பில் திறைசேரி அனுப்பப்பட்ட பதிலோடு UCG தலைவர் தொழில்சங்கங்களை அறிவித்திருக்கின்றார். அதற்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய நிலைமையோடு தான் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என கல்வி அமைச்சர் சுஷில் பிரேம ஜெயந்த தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றில் இடம்பெற்றுள்ள உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினை 2018 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட பிரச்சனை. 6 ஆண்டுகளில் 15 வீத வித்தியாசத்தை தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியிருக்கின்றேன்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து செலுத்துவதற்கும் அதற்கு வரவு செலவு திட்டத்தில் இணைப்பது பற்றியும் இணக்கப்பாடுகள் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலைமை என்னவென்றால் கல்வி சார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஏற்பட்டது. அவர்களினுடைய கொடுப்பனவு அதிகரிக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அது கொடுக்கப்பட்டது. அது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் ஆறுமணி வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஜனாதிபதி செயலாளர்கள், திறைசேரி உத்தியோகத்தர்கள், நான் எமது அமைச்சின் செயலாளர், UGC தவிசாளர்,தொழில் சனத் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள். அது தொடர்பில் எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டு திறைசேரிக்கு அனுப்பப்பட்டது.
எஞ்சிய நிதியின் மூலம் இதனை அடுத்த ஆறுமாதத்துக்குள் செலுத்துவதற்கு அனுமதியளிக்குமாறு கேட்டிருக்கின்றோம். அதன்படி திறைசேரி அனுப்பப்பட்ட பதிலோடு UCG தலைவர் தொழில்சங்கங்களை அறிவித்திருக்கின்றார். அதற்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
அந்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய நிலைமையோடு தான் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் ஆனால் விரிவுரைகளை பல பேராசிரியர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள். பரீட்சை நடத்த முடியாமல் இருக்கின்றது. பட்டமளிப்பு விழாக்கள் பிற்போடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சில இடையூறுகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி சாரா ஊழியர் பிரச்சினையை ஒருமாத கால அவகாசத்திலே தீர்க்கப்படும் - சுஷில் தெரிவிப்பு. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் பிரச்சினை தொடர்பில் திறைசேரி அனுப்பப்பட்ட பதிலோடு UCG தலைவர் தொழில்சங்கங்களை அறிவித்திருக்கின்றார். அதற்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய நிலைமையோடு தான் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என கல்வி அமைச்சர் சுஷில் பிரேம ஜெயந்த தெரிவித்தார்.இன்று பாராளுமன்றில் இடம்பெற்றுள்ள உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினை 2018 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட பிரச்சனை. 6 ஆண்டுகளில் 15 வீத வித்தியாசத்தை தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியிருக்கின்றேன். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து செலுத்துவதற்கும் அதற்கு வரவு செலவு திட்டத்தில் இணைப்பது பற்றியும் இணக்கப்பாடுகள் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலைமை என்னவென்றால் கல்வி சார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஏற்பட்டது. அவர்களினுடைய கொடுப்பனவு அதிகரிக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அது கொடுக்கப்பட்டது. அது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் ஆறுமணி வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஜனாதிபதி செயலாளர்கள், திறைசேரி உத்தியோகத்தர்கள், நான் எமது அமைச்சின் செயலாளர், UGC தவிசாளர்,தொழில் சனத் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள். அது தொடர்பில் எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டு திறைசேரிக்கு அனுப்பப்பட்டது. எஞ்சிய நிதியின் மூலம் இதனை அடுத்த ஆறுமாதத்துக்குள் செலுத்துவதற்கு அனுமதியளிக்குமாறு கேட்டிருக்கின்றோம். அதன்படி திறைசேரி அனுப்பப்பட்ட பதிலோடு UCG தலைவர் தொழில்சங்கங்களை அறிவித்திருக்கின்றார். அதற்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய நிலைமையோடு தான் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் ஆனால் விரிவுரைகளை பல பேராசிரியர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள். பரீட்சை நடத்த முடியாமல் இருக்கின்றது. பட்டமளிப்பு விழாக்கள் பிற்போடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சில இடையூறுகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.