• Nov 25 2024

A9 வீதியில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை...!samugammedia

Sharmi / Jan 31st 2024, 4:20 pm
image

உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் இன்றைய தினம்(31)  A9  வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான   வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை முறையாக அகற்றும்   பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை முறையாக அகற்றாமல் வீதியின் இருமருங்கிலும் வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு வனவிலங்குகளின் பாதிப்பு எதிர்கால சந்ததிக்கான சிறந்த சுற்றுச்சூழலை அமைக்கும் நோக்குடன் முதல் கட்டாமாக ஏ 9  வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான   வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை முறையாக அகற்றும்   பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம்(31) பனிக்கன்குளம் கிழவன்குளம் மாங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும்  பனிக்கன்குளம்  கிராம அலுவலர் பிரிவின் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பனிக்கன்குளம்  கிராம அலுவலர் பிரிவின் மக்கள்  உலக சிறுவர் நலன் காப்பக ஊழியர்களும் இணைந்து  வீதி ஓரத்தில் வீசப்பட்டிருக்கின்ற பொலுத்தின் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை சேகரிக்கின்ற வேலை திட்டம்  உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறிப்பாக மாங்குளம்  முதல் முறுகண்டி வரையிலான பகுதிகளில்  ஆங்காங்கே வீசப்பட்டிருக்கின்ற பொருட்களை சேகரித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊடாக அகற்றுவதற்கான முதல்கட்ட நடவடிக்கையின் ஆரம்ப பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில பணியாளர்களைக் கொண்டு உழவு இயந்திரங்கள் மூலம் வீதியின் இருமரங்கிலும் இருக்கின்ற பிளாஸ்டிக் பொலித்தீன்  உள்ளிட்ட கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டு பிரதேச சபையினரிடம் வழங்கப்படுகின்ற இந்த பணி முன்னெடுக்கப்பட இருக்கின்றது

குறிப்பாக  நிரந்தர தீர்வாக மாங்குளம்  முதல் முறுகண்டி வரையிலான பகுதிகளில் 15   குப்பை தொட்டிகள்  அமைக்கப்பட்டு  ஆங்காங்கே குப்பைகள் வீசப்படுகின்ற விடயத்தை கட்டுப்படுத்தி  தொடர்ச்சியாக இந்த வீதியில் பயணிக்கின்ற மக்கள் தமது பாவனைக்கு உட்படுத்துகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலுத்தீன் பைகளை இடுவதன் ஊடக சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும்  ஆகவே  குறித்த வீதியை பயன்படுத்துகின்ற மக்களிடம் கிராம மக்கள் மற்றும் உலக சிறுவர் நலம் காப்பகத்தினர்   பணிவாக வேண்டிக்கொள்வது நீங்கள் பாவனை செய்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்   உள்ளிட்ட கழிவுப்பொருட்களை வீதிகளில் ஆங்காங்கே வீசாது இங்கு வைக்கப்பட்டிருக்கின்ற குப்பை தொட்டிகளில் போட்டு இந்த எதிர்கால சந்ததிகளை பாதுகாப்பதற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற நோக்கோடும் வனவிலங்குகளை பாதுகாக்கின்ற நோக்கோடும் முன்னெடுக்கப்படுகின்ற இந்த செயல் திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி  இந்த செயல்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

A9 வீதியில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை.samugammedia உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் இன்றைய தினம்(31)  A9  வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான   வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை முறையாக அகற்றும்   பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை முறையாக அகற்றாமல் வீதியின் இருமருங்கிலும் வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு வனவிலங்குகளின் பாதிப்பு எதிர்கால சந்ததிக்கான சிறந்த சுற்றுச்சூழலை அமைக்கும் நோக்குடன் முதல் கட்டாமாக ஏ 9  வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான   வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை முறையாக அகற்றும்   பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம்(31) பனிக்கன்குளம் கிழவன்குளம் மாங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும்  பனிக்கன்குளம்  கிராம அலுவலர் பிரிவின் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பனிக்கன்குளம்  கிராம அலுவலர் பிரிவின் மக்கள்  உலக சிறுவர் நலன் காப்பக ஊழியர்களும் இணைந்து  வீதி ஓரத்தில் வீசப்பட்டிருக்கின்ற பொலுத்தின் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை சேகரிக்கின்ற வேலை திட்டம்  உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.குறிப்பாக மாங்குளம்  முதல் முறுகண்டி வரையிலான பகுதிகளில்  ஆங்காங்கே வீசப்பட்டிருக்கின்ற பொருட்களை சேகரித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊடாக அகற்றுவதற்கான முதல்கட்ட நடவடிக்கையின் ஆரம்ப பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில பணியாளர்களைக் கொண்டு உழவு இயந்திரங்கள் மூலம் வீதியின் இருமரங்கிலும் இருக்கின்ற பிளாஸ்டிக் பொலித்தீன்  உள்ளிட்ட கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டு பிரதேச சபையினரிடம் வழங்கப்படுகின்ற இந்த பணி முன்னெடுக்கப்பட இருக்கின்றதுகுறிப்பாக  நிரந்தர தீர்வாக மாங்குளம்  முதல் முறுகண்டி வரையிலான பகுதிகளில் 15   குப்பை தொட்டிகள்  அமைக்கப்பட்டு  ஆங்காங்கே குப்பைகள் வீசப்படுகின்ற விடயத்தை கட்டுப்படுத்தி  தொடர்ச்சியாக இந்த வீதியில் பயணிக்கின்ற மக்கள் தமது பாவனைக்கு உட்படுத்துகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலுத்தீன் பைகளை இடுவதன் ஊடக சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும்  ஆகவே  குறித்த வீதியை பயன்படுத்துகின்ற மக்களிடம் கிராம மக்கள் மற்றும் உலக சிறுவர் நலம் காப்பகத்தினர்   பணிவாக வேண்டிக்கொள்வது நீங்கள் பாவனை செய்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்   உள்ளிட்ட கழிவுப்பொருட்களை வீதிகளில் ஆங்காங்கே வீசாது இங்கு வைக்கப்பட்டிருக்கின்ற குப்பை தொட்டிகளில் போட்டு இந்த எதிர்கால சந்ததிகளை பாதுகாப்பதற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற நோக்கோடும் வனவிலங்குகளை பாதுகாக்கின்ற நோக்கோடும் முன்னெடுக்கப்படுகின்ற இந்த செயல் திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி  இந்த செயல்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement