• May 19 2024

கிளிநொச்சியில் விவசாய பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு...!samugammedia

Sharmi / Oct 5th 2023, 1:49 pm
image

Advertisement

"சவால்களுக்கு மத்தியில் தன்னிறைவான உணவு உற்பத்தியை நோக்கி" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், வட்டக்கச்சி மாதிரி விவசாய பண்ணையில் வயல் விழா நிகழ்வு இன்று(05) காலை இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.ஜெயதீஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன் பந்துலசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ, வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வயல்விழா நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வயல்விழாவில் ஆரோக்கிய வாழ்விற்கான வீட்டுத்தோட்டம், வறட்சி முகாமைத்துவத்தினூடான உப உணவுப் பயிர்ச்செய்கை, சேதனப் பசளை, பீடைநாசினி, உயிர்வாயு உற்பத்தியும் பயன்பாடுகளும், சூழல் நேயத்துடனான தேனீ வளர்ப்பு, நெற்செய்கையில் உயர் விளைச்சலிற்கான தொழில்நுட்பங்கள், வினைத்திறனான பயிர்ச்செய்கைக்கு பண்ணை இயந்திரங்களின் பயன்பாடுகள், காளான் வளர்ப்பும் பெறுமதிசேர் உற்பத்திகளும், காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன முறைகள், உலர் வலயத்தில் கோப்பி, மிளகு செய்கை, பயிர்ச்சிகிச்சை முகாம், மண் பரிசோதனையும் அதன் அனுகூலங்களும், தரமான நாற்று உற்பத்தித் தொழில்நுட்பங்கள், வெற்றிகரமான சோயாச் செய்கை, அசோலா உற்பத்தியும் பயன்பாடுகளும், மண்புழு உர உற்பத்திகள், வர்த்தக ரீதியிலான மஞ்சள் செய்கை, செத்தல் மீளகாய் உற்பத்தியில் உலர்த்தியின் பயன்பாடு, இயற்கை முறையில் மரக்கறிகளை சேமித்தல், அடிக்கட்டை பயிர்ச்செய்கை, சிறுதானியங்களும் பெறுமதிசேர் உணவு தயாரிப்பும், பழ மரங்களில் தரமான விளைவைப் பெறல், பொதிப் பயிர்ச்செய்கைகளை நெல் பரிபாலனம், உயிர்க்கரி உற்பத்தியும் பயன்பாடும், பகுதி கருக்கிய உமி உற்பத்தியும் பயன்பாடும், வினைத்திறனான விதைப் பரிகரண முறைகள், சிறந்த விவசாய நடைமுறைகள், பாதுகாப்புக் கூடாரங்களில் பயிர்ச்செய்கை, பாரம்பரிய இலைமரக்கறிகளை அறிதல், கால்நடைவளர்ப்பும் ஒருங்கிணைந்த பயிர்ச்செய்கை முதலானவை பார்வைக்கான தொழில்நுட்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன.

மேலும் குறித்த வயல் விழாவினை பொதுமக்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் பார்வையிட்டமையை அவதானிக்க முடிந்தது.

இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி, விரிவுரையாளர்கள், மாவட்ட விவசாய பணிப்பாளர், மேலதிக விவசாய ஆராய்ச்சி பணிப்பாளர், முன்னாள் விவசாய ஆராய்ச்சி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர்  கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர், பரந்தன் விவசாய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பண்ணை முகாமையாளர், உத்தியோகத்தர்கள்,  விவசாய அமைப்புக்களின் பிதிநிதிகள் என பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்து கொண்டனர்.




கிளிநொச்சியில் விவசாய பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு.samugammedia "சவால்களுக்கு மத்தியில் தன்னிறைவான உணவு உற்பத்தியை நோக்கி" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், வட்டக்கச்சி மாதிரி விவசாய பண்ணையில் வயல் விழா நிகழ்வு இன்று(05) காலை இடம்பெற்றது.கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.ஜெயதீஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன் பந்துலசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ, வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வயல்விழா நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த வயல்விழாவில் ஆரோக்கிய வாழ்விற்கான வீட்டுத்தோட்டம், வறட்சி முகாமைத்துவத்தினூடான உப உணவுப் பயிர்ச்செய்கை, சேதனப் பசளை, பீடைநாசினி, உயிர்வாயு உற்பத்தியும் பயன்பாடுகளும், சூழல் நேயத்துடனான தேனீ வளர்ப்பு, நெற்செய்கையில் உயர் விளைச்சலிற்கான தொழில்நுட்பங்கள், வினைத்திறனான பயிர்ச்செய்கைக்கு பண்ணை இயந்திரங்களின் பயன்பாடுகள், காளான் வளர்ப்பும் பெறுமதிசேர் உற்பத்திகளும், காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன முறைகள், உலர் வலயத்தில் கோப்பி, மிளகு செய்கை, பயிர்ச்சிகிச்சை முகாம், மண் பரிசோதனையும் அதன் அனுகூலங்களும், தரமான நாற்று உற்பத்தித் தொழில்நுட்பங்கள், வெற்றிகரமான சோயாச் செய்கை, அசோலா உற்பத்தியும் பயன்பாடுகளும், மண்புழு உர உற்பத்திகள், வர்த்தக ரீதியிலான மஞ்சள் செய்கை, செத்தல் மீளகாய் உற்பத்தியில் உலர்த்தியின் பயன்பாடு, இயற்கை முறையில் மரக்கறிகளை சேமித்தல், அடிக்கட்டை பயிர்ச்செய்கை, சிறுதானியங்களும் பெறுமதிசேர் உணவு தயாரிப்பும், பழ மரங்களில் தரமான விளைவைப் பெறல், பொதிப் பயிர்ச்செய்கைகளை நெல் பரிபாலனம், உயிர்க்கரி உற்பத்தியும் பயன்பாடும், பகுதி கருக்கிய உமி உற்பத்தியும் பயன்பாடும், வினைத்திறனான விதைப் பரிகரண முறைகள், சிறந்த விவசாய நடைமுறைகள், பாதுகாப்புக் கூடாரங்களில் பயிர்ச்செய்கை, பாரம்பரிய இலைமரக்கறிகளை அறிதல், கால்நடைவளர்ப்பும் ஒருங்கிணைந்த பயிர்ச்செய்கை முதலானவை பார்வைக்கான தொழில்நுட்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன.மேலும் குறித்த வயல் விழாவினை பொதுமக்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் பார்வையிட்டமையை அவதானிக்க முடிந்தது.இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி, விரிவுரையாளர்கள், மாவட்ட விவசாய பணிப்பாளர், மேலதிக விவசாய ஆராய்ச்சி பணிப்பாளர், முன்னாள் விவசாய ஆராய்ச்சி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர்  கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர், பரந்தன் விவசாய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பண்ணை முகாமையாளர், உத்தியோகத்தர்கள்,  விவசாய அமைப்புக்களின் பிதிநிதிகள் என பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement