• Jan 16 2025

மருதங்கேணியில் பொலிஸாரால் நீண்ட நாட்களாக தேடப்பட்ட நபர் கைது

Tharmini / Jan 6th 2025, 4:42 pm
image

திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (05) மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் கம்பெனியின் சொத்துக்கள், ஆவணங்கள், தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடிய சம்பவத்தின் சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக பொலிசார் வலைவீசி வந்த நிலையில் நேற்று இரவு அதிரடியாக மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்

கைது செய்ய சென்ற பொலிசாரை தாக்கியதுடன் தப்பி ஓட முயன்றதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை மருதங்கேணி பொலிசார் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மருதங்கேணியில் பொலிஸாரால் நீண்ட நாட்களாக தேடப்பட்ட நபர் கைது திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (05) மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தனியார் கம்பெனியின் சொத்துக்கள், ஆவணங்கள், தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடிய சம்பவத்தின் சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.நீண்ட நாட்களாக பொலிசார் வலைவீசி வந்த நிலையில் நேற்று இரவு அதிரடியாக மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கைது செய்ய சென்ற பொலிசாரை தாக்கியதுடன் தப்பி ஓட முயன்றதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை மருதங்கேணி பொலிசார் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement