• Sep 21 2024

தேர்தலை தடுக்கும் நடவடிக்கைகள் ஆபத்தான முன்னுதாரணமாகும்! சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை SamugamMedia

Chithra / Feb 18th 2023, 2:54 pm
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது சீர்குலைக்க அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் சட்டத்தரணி இசுறு பாலபட்டபெந்தி ஆகியோரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாட்டின் சட்டத்திற்கமைய, மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டுமெனவும், இலங்கையின் ஜனநாயகச் செயற்பாட்டின் ஒரு பகுதியான இதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் அல்லது பாராளுமன்றமானது தேர்தலுக்கான வளங்களை ஒதுக்குவதை தடுத்தல் மற்றும் இலங்கை மக்கள் தங்களது பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களை தெரிவு செய்வதை தடுத்தல் போன்ற தேர்தலை தடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் எனவும் BASL எச்சரித்துள்ளது.

எனவே அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு, அரசாங்கம் மற்றும் அனைத்து அரச அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேர்தலை தடுக்கும் நடவடிக்கைகள் ஆபத்தான முன்னுதாரணமாகும் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை SamugamMedia உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது சீர்குலைக்க அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் சட்டத்தரணி இசுறு பாலபட்டபெந்தி ஆகியோரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாட்டின் சட்டத்திற்கமைய, மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டுமெனவும், இலங்கையின் ஜனநாயகச் செயற்பாட்டின் ஒரு பகுதியான இதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நிறைவேற்று அதிகாரம் அல்லது பாராளுமன்றமானது தேர்தலுக்கான வளங்களை ஒதுக்குவதை தடுத்தல் மற்றும் இலங்கை மக்கள் தங்களது பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களை தெரிவு செய்வதை தடுத்தல் போன்ற தேர்தலை தடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் எனவும் BASL எச்சரித்துள்ளது.எனவே அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு, அரசாங்கம் மற்றும் அனைத்து அரச அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement