உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட பெண்மணி: மீண்டும் உயிருடன் நடமாடும் அதிசயம்!

செங்கல்பட்டு பகுதியில் உயிரிழந்ததாக உறவினரால் அடையாளம் காட்டப்பட்டு தகனம் செய்யப்பட்ட சந்திரா மீண்டும் உயிரோடு வந்து உறவினர்கள் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்த 72 வயதுடைய சந்திரா பஜனை கோவில் தெருவில் உள்ள, தனது மகன் வடிவேலு வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் அடிக்கடி சிங்கப்பெருமாலுக்கு செல்வதை பழக்கமாக கொண்டவர். இதன்படி 2 நாட்களுக்கு முன்பு இவர் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குழப்படைந்த உறவினர்கள் உடனடியாக சந்திராவை தேடி சென்றுள்ளனர். வெகு நேரம் சந்திராவை தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில், கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக நண்பர்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

சந்திரா தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் கருதி, உயிரிழந்த மூதாட்டியின் உடலை செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், உயிரிழந்தது தனது அம்மா தான் என வடிவேல் உறுதி செய்ததை தொடர்ந்து, உறவினர்களிடம் சந்திராவின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஊரெங்கும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு, இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வழக்கப்படி சந்திராவிற்கு இன்று காலை படையல் போட்டபொழுது, உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீடு திரும்பியுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் மற்றும் அயலார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து உறவினர்களிடமும் சந்திராவிடமும் தாம்பரம் ரயில்வே போலீசார் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்திராவின் மரணம் தொடர்பாக விசாரணைகள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தகனம் செய்யப்பட்ட உடல், யாருடையது என்பது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை