• Nov 19 2024

யாழில் எயிட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..! போதைவஸ்து பாவனையே முக்கிய காரணம்..! வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Dec 1st 2023, 2:51 pm
image

 


யாழில் போதைவஸ்து பாவனை அதிகரிக்கும் போது   எயிட்ஸ் தொற்றாளரின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய்தடுப்பு சிகிச்சை நிலையவைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. ரொகான் தெரிவித்தார்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று சிகிச்சை பிரிவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது  மேற்கண்டவாறு தெரிவித்தார .

யாழ்  மாவட்டத்தில் போதைவஸ்து பாவனை அதிகரித்து காணப்படுகின்றது. 

இந்த வருடம் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு இலக்காகி இனங்காணப்பட்டவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக காணப்படுகிறார்கள்.

போதை வஸ்து பாவனையாளர் எண்ணிக்கை  அதிகரிக்கும் போது   எயிட்ஸ் தொற்றாளரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது,

உலக நிலவரப்படி 2022 ம் ஆண்டுவரை உலகத்தில் நாலு கோடி மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிப்படைந்துள்ளார்கள். 

இந்த எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோர் கிட்டத்தட்ட  5  மில்லியன் பேர் சிறுவர்களாக காணப்படுகின்றார்கள். 

இலங்கையில் தற்போது வரை 5,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலே வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 90 பேர் இன்று வரைக்கும் எச்ஐவி தோற்றுள்ளவர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தை பொருத்தவரை கிட்டத்தட்ட 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் 3 பேர் புதிதாக இனம் காணப்பட்டார்கள். இந்த ஆண்டு நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். 

அவர்களுக்குரிய சிகிச்சைகள் யாழ். போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்படுகின்றது.

அதேபோல நோய்த்தொற்றுக்குள்ளாவோரின்  தகவல்கள் மிகவும் ரகசியமாக பேணப்படுகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் எயிட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. போதைவஸ்து பாவனையே முக்கிய காரணம். வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல் samugammedia  யாழில் போதைவஸ்து பாவனை அதிகரிக்கும் போது   எயிட்ஸ் தொற்றாளரின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய்தடுப்பு சிகிச்சை நிலையவைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. ரொகான் தெரிவித்தார்.உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று சிகிச்சை பிரிவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது  மேற்கண்டவாறு தெரிவித்தார .யாழ்  மாவட்டத்தில் போதைவஸ்து பாவனை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த வருடம் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு இலக்காகி இனங்காணப்பட்டவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக காணப்படுகிறார்கள்.போதை வஸ்து பாவனையாளர் எண்ணிக்கை  அதிகரிக்கும் போது   எயிட்ஸ் தொற்றாளரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது,உலக நிலவரப்படி 2022 ம் ஆண்டுவரை உலகத்தில் நாலு கோடி மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிப்படைந்துள்ளார்கள். இந்த எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோர் கிட்டத்தட்ட  5  மில்லியன் பேர் சிறுவர்களாக காணப்படுகின்றார்கள். இலங்கையில் தற்போது வரை 5,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலே வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 90 பேர் இன்று வரைக்கும் எச்ஐவி தோற்றுள்ளவர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.யாழ்ப்பாணத்தை பொருத்தவரை கிட்டத்தட்ட 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் 3 பேர் புதிதாக இனம் காணப்பட்டார்கள். இந்த ஆண்டு நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்குரிய சிகிச்சைகள் யாழ். போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்படுகின்றது.அதேபோல நோய்த்தொற்றுக்குள்ளாவோரின்  தகவல்கள் மிகவும் ரகசியமாக பேணப்படுகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement