• Nov 19 2024

நாட்டில் அதிகரித்து வரும் புதிய தனியார் நிறுவனங்களின் பதிவு எண்ணிக்கை!

Chithra / Aug 8th 2024, 12:31 pm
image


2022ம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், நாட்டில் புதிய தனியார் நிறுவனங்களது பதிவுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

நிறுவன பதிவாளர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர அறிக்கையில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் 12 ஆயிரத்து 651 புதிய வணிக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 10 ஆயிரத்து 520 புதிய நிறுவனங்களின் பதிவு இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 1899 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால் தொழில்முனைவோர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு வருவதாக அந்தத் தரவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் அதிகரித்து வரும் புதிய தனியார் நிறுவனங்களின் பதிவு எண்ணிக்கை 2022ம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், நாட்டில் புதிய தனியார் நிறுவனங்களது பதிவுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.நிறுவன பதிவாளர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர அறிக்கையில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் 12 ஆயிரத்து 651 புதிய வணிக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 10 ஆயிரத்து 520 புதிய நிறுவனங்களின் பதிவு இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 1899 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால் தொழில்முனைவோர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு வருவதாக அந்தத் தரவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement