• Nov 25 2024

தேர்தலுக்கு தயாராகும் மொட்டு கட்சி..! பசில் நாடு திரும்பியதும் ஆரம்பமாகவுள்ள நடவடிக்கை..!

Chithra / Jan 6th 2024, 11:46 am
image

 

இந்த ஆண்டு கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றையதினம்(05) இடம்பெற்ற  கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். 

நாடளாவிய ரீதியில் வெகுவிரைவில் அரசியல் கூட்டங்களை நடத்துவோம். 

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் என்று ஆளும் தரப்பின் ஒருசிலர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சகல தரப்பினருடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பொருளாதார நெருக்கடிக்கு தீரவு காணும் வகையில் மக்களால் ஏற்றுக் கொள்ளும் நபரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.என குறிப்பிட்டுள்ளார். 

தேர்தலுக்கு தயாராகும் மொட்டு கட்சி. பசில் நாடு திரும்பியதும் ஆரம்பமாகவுள்ள நடவடிக்கை.  இந்த ஆண்டு கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றையதினம்(05) இடம்பெற்ற  கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். நாடளாவிய ரீதியில் வெகுவிரைவில் அரசியல் கூட்டங்களை நடத்துவோம். ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் என்று ஆளும் தரப்பின் ஒருசிலர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல.ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சகல தரப்பினருடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பொருளாதார நெருக்கடிக்கு தீரவு காணும் வகையில் மக்களால் ஏற்றுக் கொள்ளும் நபரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement