• Feb 27 2025

யாழில் மரணச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவர் உயிரிழப்பு!

Tharmini / Feb 26th 2025, 11:21 am
image

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக வவுனியாவில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர்  நேற்றைய தினம்  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த வடிவேலு சற்குணராசா (வயது 61) என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் யாழ்ப்பாணம், ஆறுகால்மட பகுதியில் தமது உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக  தனது மனைவியுடன் வவுனியாவில் இருந்து வந்துள்ளார் எனவும், மரண சடங்குக்கு சென்று வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று நீராடிய வேளை மயங்கி விழுந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மரணச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக வவுனியாவில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர்  நேற்றைய தினம்  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த வடிவேலு சற்குணராசா (வயது 61) என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் யாழ்ப்பாணம், ஆறுகால்மட பகுதியில் தமது உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக  தனது மனைவியுடன் வவுனியாவில் இருந்து வந்துள்ளார் எனவும், மரண சடங்குக்கு சென்று வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று நீராடிய வேளை மயங்கி விழுந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement