• May 04 2024

யாழில் சனத்தொகையும் மதுபானசாலைகளுமே அதிகரித்துள்ளது! வேறெந்த மாற்றமுமில்லை..! - தமிழ் அரசியல் கைதி ஆரூரன்

Chithra / Jun 6th 2023, 4:34 pm
image

Advertisement

அண்மையில் நீண்ட காலமாக தமிழ் அரசியல் கைதியாகவிருந்து விடுதலை செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் 2008ம் ஆண்டு  மார்ச் மாதம் 24ம் திகதி இரவு 8 மணியளவில் கொழும்பு இரத்மலானை சொய்சாபுரம் பகுதியில்  கைது செய்யப்பட்டு கொழும்பு துறைமுகப் பொலிசிலே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  கைது செய்யப்பட்ட போது 28 வயது நிரம்பிய  பொறியியளாளராகவிருந்தார்.

ஆரம்பத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்று மொரட்டுவ பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி 2001 முதல் 2004 வரை கல்வி கற்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் பணி புரிந்துள்ளார்.

ஆரம்பத்தில் கல்வியில் சலிப்பு ஏற்பட்டாலும் மீண்டும் 2004 ம் ஆண்டு உயர் கல்வியைத் தொடர்ந்தார். முதலில் MSC Engineering தகைமைப் படிப்பை நிறைவு செய்தது விட்டு மேலதிக படிப்பை படிக்கலாம் என திட்டமிட்டிருந்தார். 

அதன்பின் Environmental & water engineering  முதுமானி கற்கை நெறியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கோரிக்கை விடுத்த போது அந்தக் கற்கை நெறியை கற்க ஆரம்பிக்கும் போது தான் துரதிஸ்டவசமாகக் கைது செய்யப்பட்டார்.


கடந்த 15 ஆண்டுகளாக கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 16 ம் திகதி கொழும்பு நீதிமன்றத்தினால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார்.

குறிப்பாக இவர் சிறையிலிருந்த காலத்தில்  எழுதியுள்ள 11 நூல்களில் 9 நூல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையி்ல் ஏனைய 2 நூல்கள் வெளியிடத் தயாரான நிலையிலுள்ளது.

2009 முதல் 2011 வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் விடுதலையாகும் நாள் வரை புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை சிறைச்சாலையிலிருந்த காலத்தில் வெளியில் நடைபெறும் விடயங்களை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியூடாக தகவல்களையறிந்து இற்றைப்படுத்தப்பட்டவர்களாக  காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்த போது சக கைதி நண்பர்களே புத்தகங்களை எழுத உறுதுணையாக இருந்ததாகவும்  அதன் முயற்சியில் "யாழிசை" என்ற நாவலை  எழுதி தந்தை மூலம் அந் நூலை வெளியீடு செய்த போது அதற்கு சாித்ய மண்டல பரிசும் கிடைத்திருந்தது.

இதேவேளை சிறை வாழ்க்கையை முடித்து வெளியில் வந்து பார்க்கும் போது  யாழ்ப்பாணத்தில் மதுபானக்கடைகள் மற்றும் சனத்தொகை அதிகரித்துள்ளதாகவும், மதுபாவனையாளர்கள் முன்னைய காலத்திலும் அதிகளவில் காணப்பட்டாலும் தற்போது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியாலே இவ் விடயங்கள் வெளிசமூகத்திற்கு தெரிய வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்து வெளியில் வந்த பின்னர் தான் புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

யாழில் சனத்தொகையும் மதுபானசாலைகளுமே அதிகரித்துள்ளது வேறெந்த மாற்றமுமில்லை. - தமிழ் அரசியல் கைதி ஆரூரன் அண்மையில் நீண்ட காலமாக தமிழ் அரசியல் கைதியாகவிருந்து விடுதலை செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் 2008ம் ஆண்டு  மார்ச் மாதம் 24ம் திகதி இரவு 8 மணியளவில் கொழும்பு இரத்மலானை சொய்சாபுரம் பகுதியில்  கைது செய்யப்பட்டு கொழும்பு துறைமுகப் பொலிசிலே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  கைது செய்யப்பட்ட போது 28 வயது நிரம்பிய  பொறியியளாளராகவிருந்தார்.ஆரம்பத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்று மொரட்டுவ பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி 2001 முதல் 2004 வரை கல்வி கற்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் பணி புரிந்துள்ளார்.ஆரம்பத்தில் கல்வியில் சலிப்பு ஏற்பட்டாலும் மீண்டும் 2004 ம் ஆண்டு உயர் கல்வியைத் தொடர்ந்தார். முதலில் MSC Engineering தகைமைப் படிப்பை நிறைவு செய்தது விட்டு மேலதிக படிப்பை படிக்கலாம் என திட்டமிட்டிருந்தார். அதன்பின் Environmental & water engineering  முதுமானி கற்கை நெறியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கோரிக்கை விடுத்த போது அந்தக் கற்கை நெறியை கற்க ஆரம்பிக்கும் போது தான் துரதிஸ்டவசமாகக் கைது செய்யப்பட்டார்.கடந்த 15 ஆண்டுகளாக கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 16 ம் திகதி கொழும்பு நீதிமன்றத்தினால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார்.குறிப்பாக இவர் சிறையிலிருந்த காலத்தில்  எழுதியுள்ள 11 நூல்களில் 9 நூல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையி்ல் ஏனைய 2 நூல்கள் வெளியிடத் தயாரான நிலையிலுள்ளது.2009 முதல் 2011 வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் விடுதலையாகும் நாள் வரை புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.இதேவேளை சிறைச்சாலையிலிருந்த காலத்தில் வெளியில் நடைபெறும் விடயங்களை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியூடாக தகவல்களையறிந்து இற்றைப்படுத்தப்பட்டவர்களாக  காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.சிறையிலிருந்த போது சக கைதி நண்பர்களே புத்தகங்களை எழுத உறுதுணையாக இருந்ததாகவும்  அதன் முயற்சியில் "யாழிசை" என்ற நாவலை  எழுதி தந்தை மூலம் அந் நூலை வெளியீடு செய்த போது அதற்கு சாித்ய மண்டல பரிசும் கிடைத்திருந்தது.இதேவேளை சிறை வாழ்க்கையை முடித்து வெளியில் வந்து பார்க்கும் போது  யாழ்ப்பாணத்தில் மதுபானக்கடைகள் மற்றும் சனத்தொகை அதிகரித்துள்ளதாகவும், மதுபாவனையாளர்கள் முன்னைய காலத்திலும் அதிகளவில் காணப்பட்டாலும் தற்போது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியாலே இவ் விடயங்கள் வெளிசமூகத்திற்கு தெரிய வருவதாகவும் தெரிவித்துள்ளார்.சிறையிலிருந்து வெளியில் வந்த பின்னர் தான் புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement