• May 19 2024

சிங்களவர்களால் துடைத்து எறியப்பட்டு பின் கதவினால் ஜனாதிபதியானவர் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க மாட்டார்! - கஜேந்திரன் காட்டம்..! samugammedia

Chithra / May 17th 2023, 11:21 am
image

Advertisement

தமிழ் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கண்துடைப்பு செய்வதாகவும் அதன் மூலம் சர்வதேசத்திடம் நிதியுதவிகளை பெற்று பாதாளத்திற்குள் நாட்டினை ஜனாதிபதி கட்டியெழுப்ப முயல்வதாகவும் அவற்றை தெரிந்தும் சில தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாகவும் 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும்  பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் யாழில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி போன்ற வடக்கு கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலே இன பிரச்சினைக்கு தீர்வு குறித்து சந்திப்பு இடம்பெற்றது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நாம் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளோம். எம் இருவரையும் தவிர ஏனையோர் அந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். 

இது வெறும் கண்துடைப்பிற்கான பேச்சுவார்த்தையே. தமிழ் தரப்புடன் பேசி, தான் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களை அரவணைத்து கொண்டு செல்வதாக சர்வதேசத்திற்கு காட்டி அவர்களிடமிருந்து நிதியுதவிகளை பெற்று ராஜபக்சர்களாலும், ரணிலாலும் விழுந்து போய் மற்றும் கொள்ளையடிக்கப்பட்டு பாதாளத்தில் வீழ்த்தப்பட்ட நாட்டை மீட்டெடுக்க நிதியுதவியை பெறவே ரணில் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தினை நடத்துகின்றார். 

அதை தெரிந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்களிற்கு கிடைக்க கூடிய வாய்ப்புக்கள் இல்லாமல் செய்யப்பட்டு சிங்கள பௌத்த பேரினவாத அரசு பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றப்படுதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. 

அடைந்த டிசம்பர் வரவு செலவு திட்ட காலப்பகுதியில் அழைப்பு விடுத்தார். சுதந்திரத்தினத்திற்கு முன்னதாக இனப்பிரச்சினையை தீர்ப்பதாகவும் அதற்கு ஒத்துழைப்பு நல்குமாரும் கேட்டுக்கொண்டார். 

அதற்கு இனப்பிரச்சனையை தீர்ப்பது குறித்து உண்மையான எண்ணம் இருப்பின் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து தோல்வியடைந்துள்ள , தமிழருக்கும் சிங்களவரிற்கும் இடையே இட்டு நிரப்ப முடியாத பகையுடன் இடைவெளியை உருவாகியுள்ள மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளிய ஒற்றையாட்சி அரசியலமைப்பினை கைவிட்டு சமஸ்டி அரசியலமைப்பை கொண்டுவருவது தொடர்பாக பேச தயார் என்றால் அதில் நாமும் கலந்து கொள்வோம் என்று கூறினோம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்கினேஸ்வரன் போன்ற தரப்பும் ஒற்றையாட்சி தொடர்பாக பேசப்படுமாயின் அதில் கலந்து கொள்ள கூடாது என்றும் கோரினோம். 

ஆனாலும் மேற்குநாடுகளின் அழுத்தம் காரணமாக சீன சார்பு ராஜபக்சர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின் இந்திய, அமெரிக்கா, ஐரோப்பிய தரப்புகளின் நலன்களை  பேண முழுமையாக ஒத்துழைத்து செயற்படுகின்ற ரணிலை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களின் நலன்களை முற்றாக கைவிட்டு ஏமாற்று நாடக பேச்சுவார்த்தையில் கலந்து அரசாங்கத்தை பிணை எடுக்க தொடங்கினார்கள். 

இதனால் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதிகிடைப்பதற்கான அங்கீகாரமும் முதற்கட்ட நிதியும் கிடைத்துள்ளது. அதன் பின் IMF ன் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக, அதன் மூலம் மக்களிற்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தான் தப்ப பாராளுமன்றம் எடுத்த முடிவு என்று கட்டுவதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பினை நடத்தினார். 

அதில் கூட்டமைப்பினரும்  விக்கினேஸ்வரனும் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களிக்காது ஒளித்து கொண்டதன் மூலம் ரணிலுக்கு IMF  வழங்குகின்ற நிதியுதவிக்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர். 

அது மட்டுமன்றி தற்பொழுது இடம்பெற்ற பேச்சவார்த்தையில் தமிழ் மக்களின் விருப்பங்களிற்கு மாறாகவே கலந்து கொண்டுள்ளனர். அது முடிந்த பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக சுமந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக விக்கினேஸ்வரனும் கருத்தினை கூறியுள்ளார். 

அதை வெளிப்படையாக தமிழ் மக்கள் பார்க்கும் பொழுது 13 ஆம் திருத்த சட்டத்தில் விக்கினேஸ்வரன் இருப்பது போன்றும் சுமந்திரன் சமஸ்டிக்காக முயற்சி செய்வது போன்றும் மாய தோற்றம் ஏற்பட கூடும். 

ஆனால், இருவரும் ஒற்றையாட்சிக்கு கீழ் நின்றே தீர்வு பற்றி பேசியுள்ளனர். விக்கினேஸ்வரன் சிக்குப்பட்டுள்ள 13 ஆம் திருத்த சட்டத்தினை எவ்வாறு முன்கொண்டு செல்லலாம் என்று கட்டுரை எழுதி கொண்டு போய் கொடுத்ததாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புதிய அரசியலமைப்பு வேண்டும் என்றும் சுமந்திரன் காதில் பூ சுத்துகின்றார். 

2016 ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த பொழுது சுமந்திரனும், சம்மந்தனும் சேர்ந்து ஒரு புதிய அரசியலமைப்பினை செய்துள்ளனர். அது வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி  கைவிட்டுள்ளது, பௌத்தம் முதன்மை மொழி என்று சம்மந்தனின் கையெழுத்துடன் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது முழுவதுமாக ஒற்றையாட்சி மயமானது. இவ்வாறே இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்றுகின்றனர். 

சிங்கள மக்களால் முழுவதுமாக துடைத்து எறியப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியிலே ஒரு ஆசனத்தை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் தேசிய பட்டியலாசனத்தில் கூட தேர்தல் முடிந்த கையுடன் நாடாளுமன்றத்திற்கு வர முடியாது ஓராண்டு கழித்து வந்து ஏனையவர்களை அடக்கி ஒடுக்கி  பின்கதவினால் ஜனாதிபதியாக வந்த ஒருவர் ஒருபொழுதும் தமிழ் மக்களிற்கான தீர்வு குறித்து அக்கறை செலுத்த மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே எனவும் தெரிவித்தார்

சிங்களவர்களால் துடைத்து எறியப்பட்டு பின் கதவினால் ஜனாதிபதியானவர் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க மாட்டார் - கஜேந்திரன் காட்டம். samugammedia தமிழ் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கண்துடைப்பு செய்வதாகவும் அதன் மூலம் சர்வதேசத்திடம் நிதியுதவிகளை பெற்று பாதாளத்திற்குள் நாட்டினை ஜனாதிபதி கட்டியெழுப்ப முயல்வதாகவும் அவற்றை தெரிந்தும் சில தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும்  பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி போன்ற வடக்கு கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலே இன பிரச்சினைக்கு தீர்வு குறித்து சந்திப்பு இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நாம் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளோம். எம் இருவரையும் தவிர ஏனையோர் அந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். இது வெறும் கண்துடைப்பிற்கான பேச்சுவார்த்தையே. தமிழ் தரப்புடன் பேசி, தான் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களை அரவணைத்து கொண்டு செல்வதாக சர்வதேசத்திற்கு காட்டி அவர்களிடமிருந்து நிதியுதவிகளை பெற்று ராஜபக்சர்களாலும், ரணிலாலும் விழுந்து போய் மற்றும் கொள்ளையடிக்கப்பட்டு பாதாளத்தில் வீழ்த்தப்பட்ட நாட்டை மீட்டெடுக்க நிதியுதவியை பெறவே ரணில் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தினை நடத்துகின்றார். அதை தெரிந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்களிற்கு கிடைக்க கூடிய வாய்ப்புக்கள் இல்லாமல் செய்யப்பட்டு சிங்கள பௌத்த பேரினவாத அரசு பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றப்படுதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அடைந்த டிசம்பர் வரவு செலவு திட்ட காலப்பகுதியில் அழைப்பு விடுத்தார். சுதந்திரத்தினத்திற்கு முன்னதாக இனப்பிரச்சினையை தீர்ப்பதாகவும் அதற்கு ஒத்துழைப்பு நல்குமாரும் கேட்டுக்கொண்டார். அதற்கு இனப்பிரச்சனையை தீர்ப்பது குறித்து உண்மையான எண்ணம் இருப்பின் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து தோல்வியடைந்துள்ள , தமிழருக்கும் சிங்களவரிற்கும் இடையே இட்டு நிரப்ப முடியாத பகையுடன் இடைவெளியை உருவாகியுள்ள மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளிய ஒற்றையாட்சி அரசியலமைப்பினை கைவிட்டு சமஸ்டி அரசியலமைப்பை கொண்டுவருவது தொடர்பாக பேச தயார் என்றால் அதில் நாமும் கலந்து கொள்வோம் என்று கூறினோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்கினேஸ்வரன் போன்ற தரப்பும் ஒற்றையாட்சி தொடர்பாக பேசப்படுமாயின் அதில் கலந்து கொள்ள கூடாது என்றும் கோரினோம். ஆனாலும் மேற்குநாடுகளின் அழுத்தம் காரணமாக சீன சார்பு ராஜபக்சர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின் இந்திய, அமெரிக்கா, ஐரோப்பிய தரப்புகளின் நலன்களை  பேண முழுமையாக ஒத்துழைத்து செயற்படுகின்ற ரணிலை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களின் நலன்களை முற்றாக கைவிட்டு ஏமாற்று நாடக பேச்சுவார்த்தையில் கலந்து அரசாங்கத்தை பிணை எடுக்க தொடங்கினார்கள். இதனால் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதிகிடைப்பதற்கான அங்கீகாரமும் முதற்கட்ட நிதியும் கிடைத்துள்ளது. அதன் பின் IMF ன் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக, அதன் மூலம் மக்களிற்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தான் தப்ப பாராளுமன்றம் எடுத்த முடிவு என்று கட்டுவதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பினை நடத்தினார். அதில் கூட்டமைப்பினரும்  விக்கினேஸ்வரனும் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களிக்காது ஒளித்து கொண்டதன் மூலம் ரணிலுக்கு IMF  வழங்குகின்ற நிதியுதவிக்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர். அது மட்டுமன்றி தற்பொழுது இடம்பெற்ற பேச்சவார்த்தையில் தமிழ் மக்களின் விருப்பங்களிற்கு மாறாகவே கலந்து கொண்டுள்ளனர். அது முடிந்த பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக சுமந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக விக்கினேஸ்வரனும் கருத்தினை கூறியுள்ளார். அதை வெளிப்படையாக தமிழ் மக்கள் பார்க்கும் பொழுது 13 ஆம் திருத்த சட்டத்தில் விக்கினேஸ்வரன் இருப்பது போன்றும் சுமந்திரன் சமஸ்டிக்காக முயற்சி செய்வது போன்றும் மாய தோற்றம் ஏற்பட கூடும். ஆனால், இருவரும் ஒற்றையாட்சிக்கு கீழ் நின்றே தீர்வு பற்றி பேசியுள்ளனர். விக்கினேஸ்வரன் சிக்குப்பட்டுள்ள 13 ஆம் திருத்த சட்டத்தினை எவ்வாறு முன்கொண்டு செல்லலாம் என்று கட்டுரை எழுதி கொண்டு போய் கொடுத்ததாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புதிய அரசியலமைப்பு வேண்டும் என்றும் சுமந்திரன் காதில் பூ சுத்துகின்றார். 2016 ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த பொழுது சுமந்திரனும், சம்மந்தனும் சேர்ந்து ஒரு புதிய அரசியலமைப்பினை செய்துள்ளனர். அது வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி  கைவிட்டுள்ளது, பௌத்தம் முதன்மை மொழி என்று சம்மந்தனின் கையெழுத்துடன் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது முழுவதுமாக ஒற்றையாட்சி மயமானது. இவ்வாறே இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்றுகின்றனர். சிங்கள மக்களால் முழுவதுமாக துடைத்து எறியப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியிலே ஒரு ஆசனத்தை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் தேசிய பட்டியலாசனத்தில் கூட தேர்தல் முடிந்த கையுடன் நாடாளுமன்றத்திற்கு வர முடியாது ஓராண்டு கழித்து வந்து ஏனையவர்களை அடக்கி ஒடுக்கி  பின்கதவினால் ஜனாதிபதியாக வந்த ஒருவர் ஒருபொழுதும் தமிழ் மக்களிற்கான தீர்வு குறித்து அக்கறை செலுத்த மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே எனவும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement