• Nov 14 2024

பாணின் விலை நூறு ரூபாய்? பேக்கரிகள் சங்கம் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

Chithra / Aug 2nd 2024, 10:50 am
image


பாண் ஒன்றினை 130 ரூபாவிற்கு விற்பனை செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

450 கிராம் பாண் ஒன்றின் விலை  130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை அண்மையில் அறிவித்திருந்தது.

தற்போது பாண் நியாயமான விலைக்கு விற்கப்படுகிறதா என நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், பேக்கரி உரிமையாளர்கள் தேவையான எடையில் பாணை உற்பத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தலைவர் தெரிவித்தார்.

கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்தால் பாணை 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது பேக்கரி உரிமையாளர்களின் பின்னால் தாவாமல் கோதுமை மாவின் விலையை குறைப்பதே ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


பாணின் விலை நூறு ரூபாய் பேக்கரிகள் சங்கம் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை பாண் ஒன்றினை 130 ரூபாவிற்கு விற்பனை செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.450 கிராம் பாண் ஒன்றின் விலை  130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை அண்மையில் அறிவித்திருந்தது.தற்போது பாண் நியாயமான விலைக்கு விற்கப்படுகிறதா என நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதனால், பேக்கரி உரிமையாளர்கள் தேவையான எடையில் பாணை உற்பத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தலைவர் தெரிவித்தார்.கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்தால் பாணை 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த தருணத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது பேக்கரி உரிமையாளர்களின் பின்னால் தாவாமல் கோதுமை மாவின் விலையை குறைப்பதே ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement