• Dec 13 2024

தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிப்பு!

Chithra / Dec 12th 2024, 1:40 pm
image

 

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதற்கமைய, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 800 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் ஏற்பட்டுள்ள தேங்காய் விலை உயர்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேங்காயின் விலை அதிகரிப்பு காரணமாக உள்ளுர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 150 – 200 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சந்தையில் தேங்காய்களை கொள்வனவு செய்து எண்ணெய் எடுப்பதன் மூலம் எவ்வித இலாபமும் அடைய முடியாது என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர் புத்திக டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிப்பு  இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.அதற்கமைய, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 800 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சந்தையில் ஏற்பட்டுள்ள தேங்காய் விலை உயர்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தேங்காயின் விலை அதிகரிப்பு காரணமாக உள்ளுர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.அத்துடன் தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 150 – 200 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.சந்தையில் தேங்காய்களை கொள்வனவு செய்து எண்ணெய் எடுப்பதன் மூலம் எவ்வித இலாபமும் அடைய முடியாது என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர் புத்திக டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement