• Apr 30 2024

கிளிநொச்சியில் சடுதியாக குறைந்த மரக்கறிகளின் விலை...!

Sharmi / Apr 11th 2024, 9:21 am
image

Advertisement

கிளிநொச்சியில் மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,  தற்போது மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ கத்தரிக்காய் 150 ரூபாய் வரையிலும், பயிற்றங்காய் 100 ரூபாய் வரையிலும், பூசணி 100 ரூபாய் வரையிலும், ஏனைய மரக்கறி வகைகள் 150 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தோட்ட செய்கையாளர்களிடமிருந்து வியாபாரிகள், 60 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையிலான விலைக்கே மரக்கறிகளை கொள்வனவு செய்வதன் காரணமாக தோட்ட செய்கையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் கிருமி நாசினிகள், நாளாந்த கூலி, பசளை உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, விவசாய பொருட்களின் விலை, வறட்சி உள்ளிட்ட சவால்களிற்கு முகம் கொடுத்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் எமக்கு, செய்கைக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை எனவும் அவர்கள்    கவலை வெளியிடுகின்றனர்.




கிளிநொச்சியில் சடுதியாக குறைந்த மரக்கறிகளின் விலை. கிளிநொச்சியில் மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,  தற்போது மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளது.குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ கத்தரிக்காய் 150 ரூபாய் வரையிலும், பயிற்றங்காய் 100 ரூபாய் வரையிலும், பூசணி 100 ரூபாய் வரையிலும், ஏனைய மரக்கறி வகைகள் 150 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக தோட்ட செய்கையாளர்களிடமிருந்து வியாபாரிகள், 60 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையிலான விலைக்கே மரக்கறிகளை கொள்வனவு செய்வதன் காரணமாக தோட்ட செய்கையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் கிருமி நாசினிகள், நாளாந்த கூலி, பசளை உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.அதேவேளை, விவசாய பொருட்களின் விலை, வறட்சி உள்ளிட்ட சவால்களிற்கு முகம் கொடுத்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் எமக்கு, செய்கைக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை எனவும் அவர்கள்    கவலை வெளியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement