• Nov 28 2024

உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை...! கேரட் மூட்டைகளை பாதுகாக்க காவலர்கள் ...!samugammedia

Sharmi / Jan 19th 2024, 1:05 pm
image

இலங்கையில் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் பன் மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக கேரட் , போஞ்சி , லீக்ஸ்,  மிளகாய் , கோவா உள்ளிட்டவை 1000 ரூபாவை கடந்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதேவேளை,  கேரட் விலையானது சில தினங்களாக இரண்டாயிரம் ரூபாவைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், சந்தையில் கேரட்டின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால்,  பொருளாதார மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கேரட் மூட்டைகளை பாதுகாக்க காவலர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை கேரட் மூட்டைகளை பாதுகாக்கும் காவலர் ஒருவருக்கு 1500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

கேரட்டின் விலை அதிகரிப்பு காரணமாக தினமும் பொருளாதார நிலையங்களுக்கு வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.







உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை. கேரட் மூட்டைகளை பாதுகாக்க காவலர்கள் .samugammedia இலங்கையில் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் பன் மடங்கு அதிகரித்துள்ளது.குறிப்பாக கேரட் , போஞ்சி , லீக்ஸ்,  மிளகாய் , கோவா உள்ளிட்டவை 1000 ரூபாவை கடந்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.அதேவேளை,  கேரட் விலையானது சில தினங்களாக இரண்டாயிரம் ரூபாவைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில், சந்தையில் கேரட்டின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால்,  பொருளாதார மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கேரட் மூட்டைகளை பாதுகாக்க காவலர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.அதேவேளை கேரட் மூட்டைகளை பாதுகாக்கும் காவலர் ஒருவருக்கு 1500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.கேரட்டின் விலை அதிகரிப்பு காரணமாக தினமும் பொருளாதார நிலையங்களுக்கு வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement