• Nov 15 2024

நாட்டின் பிரச்சினைகளுக்கு நிறைவேற்று அதிகாரத்தின் மூலமே தீர்வு காணலாம்...! அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை...!samugammedia

Sharmi / Feb 15th 2024, 2:52 pm
image

நாட்டில் இன்றைய பிரச்சினைகளிற்கு நிறைவேற்று அதிகாரம் ஊடாகத்தான் தீர்வுகாணக்கூடிய சூழ்நிலை உள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார மாற்றம் உள்ளிட்ட பல்வேடு விடயங்கள் தொடர்பில் தேர்தல் காலகட்டத்தில் இவ்வாறான கருத்துக்கள் வந்து போவதுண்டு. வரலாற்றை நாங்கள் திருப்பி பார்க்கின்ற பொழுது, 78 ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்த பொழுது, தமிழ் தரப்பிலும் அதனை வரவேற்றனர்.

காலப்போக்கில் அதனால் எழுந்த பிரச்சினைகளால் கருத்துக்கள் மாறி மாறி வந்ததுண்டு.

ங்களை பொறுத்த வரைவில் இன்றைய பிரச்சினைகளிற்கு நிறைவேற்று அதிகாரம் ஊடாகத்தான் தீர்வுகாணக்கூடிய சூழ்நிலை இலங்கையில் இருக்கின்றது.

இருந்த போதிலும், நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையிலான சமச்சீர் நிலை பேணப்பட வேண்டும் என்று கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.




நாட்டின் பிரச்சினைகளுக்கு நிறைவேற்று அதிகாரத்தின் மூலமே தீர்வு காணலாம். அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை.samugammedia நாட்டில் இன்றைய பிரச்சினைகளிற்கு நிறைவேற்று அதிகாரம் ஊடாகத்தான் தீர்வுகாணக்கூடிய சூழ்நிலை உள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நிறைவேற்று அதிகார மாற்றம் உள்ளிட்ட பல்வேடு விடயங்கள் தொடர்பில் தேர்தல் காலகட்டத்தில் இவ்வாறான கருத்துக்கள் வந்து போவதுண்டு. வரலாற்றை நாங்கள் திருப்பி பார்க்கின்ற பொழுது, 78 ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்த பொழுது, தமிழ் தரப்பிலும் அதனை வரவேற்றனர்.காலப்போக்கில் அதனால் எழுந்த பிரச்சினைகளால் கருத்துக்கள் மாறி மாறி வந்ததுண்டு. எங்களை பொறுத்த வரைவில் இன்றைய பிரச்சினைகளிற்கு நிறைவேற்று அதிகாரம் ஊடாகத்தான் தீர்வுகாணக்கூடிய சூழ்நிலை இலங்கையில் இருக்கின்றது.இருந்த போதிலும், நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையிலான சமச்சீர் நிலை பேணப்பட வேண்டும் என்று கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement