• Sep 17 2024

யாழின் முக்கிய வீதியில் விவசாயம் செய்து பிரதேச வாசிகள் நூதன போராட்டம்..! samugammedia

Chithra / Nov 10th 2023, 2:13 pm
image

Advertisement


யாழ். மானிப்பாய் பிரதான வீதியின் மூளாய் பகுதியில் வீதியினை இடைமறித்து வீதியில் நெல் விதைத்து நூதனமான முறையில் பிரதேச வாசிகள் இன்று போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பொருளாதார ஸ்திரதன்மை காரணமாக வீதி அபிவிருத்திகள் இடைநிறுத்தப்பபட்டடிருந்து. 

இந்நிலையில் அண்மையில் தற்காலிக புனரமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஆணைக்கோட்டை முதல் சுழிபுரம் வழக்கம்பரை வரையான வீதி புனரைமைப்பு பணிகளுக்குள்ளான நிலையில் வழக்கம்பரை முதல் பொன்னாலை வரையான வீதி எதுவித புனரமைப்புக்களும் இன்றி குளம் போல காட்சியளித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை பொன்னாலை மற்றும் மூளாய் பகுதியினை சேர்ந்த விவசாயிகள், சிறுவர்கள், பொதுமக்கள் இணைந்து காரைநகர் - மானிப்பாய் பிரதான வீதியின உழவு இயந்திரம் மாட்டு வண்டிலை கொண்டு இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பொழுது வெள்ளத்தினால் நீந்தியா செல்வது! ரணில் அரசாங்கமே எங்கள் மீது ஏன் இந்த பாரபட்சம்! வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளே உங்களுக்கு கண் இல்லையா! சைக்கிள் உடைகிறது சட்டை சேறாகிறது நடந்து சென்றால் கால்கள் புண் ஆகிறது அரச அதிகாரிகளே எங்களையும் பாருங்கள்! வழக்கமப்ரை முதல் பொன்னாலைவரை வாழும் மக்கள் மந்தைகளா? ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக வீதியில் குளம்போல சேதமடைந்து காணப்பட்டட பகுதியில் ஏர் கலப்பை பூட்டி கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்து தேவாரம் பாடி ஏர் உழுவது போல ஆற்றுகை செய்து நெல் மணிகளை வீதியில் விதைத்தனர்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள் எமக்கென இன்று வட்டுகோட்டை பகுதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்றி தவிக்கின்றோம் . இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடமைக்கு இருக்கின்றார்கள். 

வீதியால் பயணிக்கின்ற பாடாசலை மாணவர்கள் வயது முதிர்ந்தவர்கள் பெண்கள் சிறுவர்கள் வாகன ஓட்டுனர்கள் என பலரும் இதனால் தமது அன்றாட வாழ்வியலை அச்சத்திற்குள்ளாக கடக்கின்றார்கள். 

இதனால் விபத்துக்களும் பதிவாகியுள்ள்து. இதனை கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வெகுவிரைவில் புனைரமைப்பு பணிகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.இல்லையெனில் நிச்சயமாக இவ்வீதிகளை விவசாய நிலங்களாக மாற்றுவோம் என தெரிவித்தனர்.

இதன்காரணமாக சுமார் 1 மணத்தியலாமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன்பொழுது மூளாய் பொன்னாலை பகுதி சிறுவர்கள், விவசாயிகள், பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.


யாழின் முக்கிய வீதியில் விவசாயம் செய்து பிரதேச வாசிகள் நூதன போராட்டம். samugammedia யாழ். மானிப்பாய் பிரதான வீதியின் மூளாய் பகுதியில் வீதியினை இடைமறித்து வீதியில் நெல் விதைத்து நூதனமான முறையில் பிரதேச வாசிகள் இன்று போராட்டத்தில்  ஈடுபட்டனர்.குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பொருளாதார ஸ்திரதன்மை காரணமாக வீதி அபிவிருத்திகள் இடைநிறுத்தப்பபட்டடிருந்து. இந்நிலையில் அண்மையில் தற்காலிக புனரமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஆணைக்கோட்டை முதல் சுழிபுரம் வழக்கம்பரை வரையான வீதி புனரைமைப்பு பணிகளுக்குள்ளான நிலையில் வழக்கம்பரை முதல் பொன்னாலை வரையான வீதி எதுவித புனரமைப்புக்களும் இன்றி குளம் போல காட்சியளித்து வருகின்றன.இந்நிலையில் இன்று காலை பொன்னாலை மற்றும் மூளாய் பகுதியினை சேர்ந்த விவசாயிகள், சிறுவர்கள், பொதுமக்கள் இணைந்து காரைநகர் - மானிப்பாய் பிரதான வீதியின உழவு இயந்திரம் மாட்டு வண்டிலை கொண்டு இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்பொழுது வெள்ளத்தினால் நீந்தியா செல்வது ரணில் அரசாங்கமே எங்கள் மீது ஏன் இந்த பாரபட்சம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளே உங்களுக்கு கண் இல்லையா சைக்கிள் உடைகிறது சட்டை சேறாகிறது நடந்து சென்றால் கால்கள் புண் ஆகிறது அரச அதிகாரிகளே எங்களையும் பாருங்கள் வழக்கமப்ரை முதல் பொன்னாலைவரை வாழும் மக்கள் மந்தைகளா ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ச்சியாக வீதியில் குளம்போல சேதமடைந்து காணப்பட்டட பகுதியில் ஏர் கலப்பை பூட்டி கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்து தேவாரம் பாடி ஏர் உழுவது போல ஆற்றுகை செய்து நெல் மணிகளை வீதியில் விதைத்தனர்.இதனையடுத்து கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள் எமக்கென இன்று வட்டுகோட்டை பகுதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்றி தவிக்கின்றோம் . இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடமைக்கு இருக்கின்றார்கள். வீதியால் பயணிக்கின்ற பாடாசலை மாணவர்கள் வயது முதிர்ந்தவர்கள் பெண்கள் சிறுவர்கள் வாகன ஓட்டுனர்கள் என பலரும் இதனால் தமது அன்றாட வாழ்வியலை அச்சத்திற்குள்ளாக கடக்கின்றார்கள். இதனால் விபத்துக்களும் பதிவாகியுள்ள்து. இதனை கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வெகுவிரைவில் புனைரமைப்பு பணிகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.இல்லையெனில் நிச்சயமாக இவ்வீதிகளை விவசாய நிலங்களாக மாற்றுவோம் என தெரிவித்தனர்.இதன்காரணமாக சுமார் 1 மணத்தியலாமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இதன்பொழுது மூளாய் பொன்னாலை பகுதி சிறுவர்கள், விவசாயிகள், பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement